பிஇ -பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயற்பியலும் கணிதமும் கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2021

பிஇ -பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயற்பியலும் கணிதமும் கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு.



நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிஇ மற்றும் பி டெக் பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE அறிவித்துள்ளது.


தற்போது உள்ள நடைமுறைப்படி இவை கட்டாயமாக உள்ளன.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், இயற்பியல், கணக்கு, கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.


வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணிதம் தான் அனைத்து பொறியியல் பட்டப்படிப்புக்கும் அடித்தளம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2 comments:

  1. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    Starts From :
    *March*
    15.03.2021(Monday)

    To
    *JUNE*
    18.06.2021 (Friday)

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  2. எதுவுமே தேவையில்லை, ேவண்டாம் , என்று உள்ளதையும் குறைப்பதுதான் உங்கள் புதிய கல்விக் கொள்கையா? 45% என்று மதிப்ெண் நிர்ணயித்து இருக்கிறீர்கள், இதில், செய்முைைைறைத் தேர்வுக்கே 30 மதிப்ெண்கள் வழங்கப்படுகின்றன. மீதி எழுபதுக்கு 15 எடுத்தால் தேர்ச்சி. இதில் ஒரு மதிப்பெண் விரைக்களே 15 உள்ளது. ஒத்தையா ரெட்டையா போட்டால் கூட ஏழு அல்லது எட்டு மதிப்பெண்கள் வாங்கி விடலாம். மீதி உள்ள வினாக்களுக்கு பக்கத்தை அழைப்பிதழை பக்கத்திற்கு அரை மதிப்பெண்கள் போட்டால் கூட 15 எடுத்துவிடலாம். இந்த மாதிரி சொத்தையான மதிப்பீட்டு முறையில் வைத்துக் கொண்டு பிஇ பிடெக் படிக்க 45 போதும் என்று நீங்கள் சொல்வது உங்கள் கல்விக் கொள்கைகளில் இருக்கக்கூடிய ஓட்டை உடைசல்களையே காட்டுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி