Breaking News : தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2021

Breaking News : தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.





* வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை


* கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்.


தமிழக அரசின் செய்திக் குறிப்பு :


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை , பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும் , கோவிட் தொற்றால் மாணவர்களும் அகனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும் , மாணவர்ச 3/4 பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் , தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. கோவிட் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

5 comments:

  1. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    ALL SUBJECTS LIVE ONLINE CLASSES AVAILABLE FROM CLASS ROOM

    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  2. NEET UG 2021
    Exam August 1st

    Repeater & Crash Course
    Coaching classes

    From Class Room Direct & live online classes
    Separate English and Tamil Medium

    Hostel Attached Class rooms

    Model classes:
    YouTube search:
    Magic plus coaching centre

    For Admission:
    Magic Plus Coaching Center, Erode-1
    Contact:
    9976986679
    6380727953

    ReplyDelete
  3. Ayya 12th enna superhumansa avangalukku ellam corona varave varathu appdithana valga valamudan

    ReplyDelete
  4. first 2013 ku posting potunga

    ReplyDelete
    Replies
    1. Next certificate expired aagaathavangakukka?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி