உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு! - kalviseithi

Apr 1, 2021

உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு!


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of 2018 - ல் 09.04.2019 ம் நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் , பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . ( i ) ஒவ்வொரு தனிமேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் . ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் அலகாகவும் கருதப்படுகிறது.

 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.

Click here to download pdf

14 comments:

 1. Appoo no teachers posting next year also VA.super velangidum

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதழ்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

   Delete
 2. For aided schools...not govt schools

  ReplyDelete
  Replies
  1. Govt school ku dhane mathaporange..? Vacancy enge irukkum. No posting

   Delete
  2. Vacancy kandipa irukathu namma pasangal govt school LA SERKRA VARAI..

   Delete
 3. Election rules irukumbodu ippadi oru arivupa,pongada

  ReplyDelete
 4. Indha article pathi teliva yaracchi sollunge sir....

  ReplyDelete
 5. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதழ்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

  ReplyDelete
 6. Let's hope..new government will change all the decisions

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்புகள் இல்ல. நண்பா .... நீதிமன்ற உத்தரவை தான் செயல் படுத்துவார்கள்..

   Delete
 7. Krishna PGTRB English

  https://t.me/K72Tr/7
  Or
  Search Krishna PGTRB English in Telegram and join

  JOIN THE TELEGRAM
  EXCLUSIVELY FOR ENGLISH STUDENTS

  ReplyDelete
 8. இதை உடனடியாக செய்து.. மொத்த காலி பணியிடங்கள் BT ASSIATANTS எவ்வளவு என தெரிய படுத்தி அதை நிரப்பும் வேலையை அரசு செய்ய வேண்டும்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி