+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Apr 16, 2021

+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 


நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலைப் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்குரிய முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் , முகப்புத்தாட்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி , முதன்மை விடைத்தாட்களுடன் முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துமாறு அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கப்பட்டது . தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகப்புத்தாட்கள் கிடைக்கப் பெறாத / சேதமடைந்த ( Barcode - Reg.No. overlapped , bar code smudged ) முகப்புத்தாட்களை தேர்வு மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User D / Password கொண்டு இணையதளம் மூலம் 16.04.2021 அன்று பிற்பகல் முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


12th Exam Top Sheet Download - DGE Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி