தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2021

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு!


 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.



இந்நிலையில் 9,10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி பதில்களை பெற உள்ளனர்.


மாணவர்களுக்கு வினாக்கள் கொடுத்து அதற்கான உரிய விடைகளை கண்டுபிடிக்கும் வகையில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருவதால் அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள இந்த தேர்வு நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

6 comments:

  1. கல்வி இப்படி தரம்கெடு போகும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன்ல இதவிட எப்படி நடத்தமுடியும். நேரில் வந்தால் கொரானா வந்து விடும் என்கிறீர்கள் இப்படி என்றால் தரம் கெட்டுப் போச்சு என்கிறீர்கள் என்ன தான் சார் பண்றது

      Delete
  2. Online class enkalukubnadathala

    ReplyDelete
  3. Anyway xam going to condect to 12th and y not for 10th spoiling all 10th 11th kids education

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி