முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2021

முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்!

 


'முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையுங்கள் Kalviseithi Telegram Group 


👉 https://t.me/kalviseithiofficial


அவரது அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன. 


மேல் முறையீடு


வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. 


இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.நடவடிக்கைஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. Sir one doubt BC and BCM ku backlog vaccancy kidayatha.. In 2017 so many vaccancies in tamil and chemistry not filled....But in 2019 Backlog only given by MBC, SC, ST But BC KU Backlog illa anybody please clarify the doubt.,

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் 2016 service act லேயே ஏப்பம் போட்டுட்டானுங்க.. இப்போ கொஞ்சம் பிடிப்பு இருந்ததும் உச்சி குடுமி மன்றத்தின் தீர்ப்பால் நாசம் .. மொத்தமா BC பிரிவுக்கு மொட்டை அடிச்சுட்டானுங்க...

      Delete
  2. Tamilan
    April 19, 2021 at 9:37 PM
    காங்கேயம் முத்தூர் வெள்ளகோயில் இங்கு உள்ள வேதியியல் ஆசிரியர்கள் யாரேனும் திருப்பூருக்கு விருப்ப மாறுதல் வேண்டுமெனில் தயவுசெய்து இந்த செய்திக்கு பின்னூட்டம் தரவும் நன்றி

    ReplyDelete
  3. வரவேற்கத்தக்கது.
    ஆயினும்,நீதிமன்ற தீர்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பதில்லை...

    ReplyDelete
  4. நல்ல திறமை இ௫ந்தால் கூவி வேண்டிய ௮வசியமில்லை நடக்காது தேர்வு க்கு ௭தற்கு ?

    ReplyDelete
  5. இனிமேல் கல்விச்செய்தி பெயரை மாற்றி வன்னியர் செய்தின்னு போட்டுட்டுப்போடா...
    ஏண்டா சாதிவெறி பிடித்த பெரியமாங்கா தான் அரசியலுக்காக அறிக்கை விடரான்னு தெரியாதா.....இல்ல உச்சிக்குடுமிகள் நீதி என்ற பெயரில் சாதிச்சண்டையை வளர்ப்பதும் தெரியாதா......

    ReplyDelete
    Replies
    1. சரியான பதிலடி சகோ,, இந்த கல்விசெய்தி admin இனியாச்சும் திருந்துமா என்று பார்ப்போம்

      Delete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி