தி.மு.க.வுக்கு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆதரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2021

தி.மு.க.வுக்கு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆதரவு!

 

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.




தமிழக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.


வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்

மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


தி.மு.க

இது தொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 60,000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தி.மு.க கழக ஆட்சிக்கு எங்களின் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.

கணினி அறிவியல்

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களும் உலகத்தரத்திற்கு ஈடான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் டாக்டர் கலைஞரால் 2008 - 09-ம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2011 ஆம் ஆண்டு சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது.

அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

உன்னதமான கல்வி அரசு பள்ளிக்கு நடைமுறைப்படுத்த இருந்ததை ஆட்சி மாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க அரசு ஏழை மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியையும், பாடப்புத்தகங்களையும் வழங்காமல் பத்தாண்டுகள் கிடப்பில் வைத்துவிட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கல்வியை முடக்கி வைத்த அ.தி.மு.க அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற தி.மு.க ஆட்சியில் கலைஞர் தந்த கணினி பாடத்தை மீண்டும் அரசு பள்ளியில் உதிக்க செய்து அதற்கான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஸ்டாலின்!!

    ஸ்டாலின் செய்வாரா! | உங்கள் சன் டிவியில் | Apr 4 - காலை 11:30 மணிக்கு

    நீட் தேர்வை விலக்குவது குறித்து

    https://youtu.be/fC0wvY_y2XU


    https://youtu.be/idG6E0qmyVw

    ReplyDelete
  2. ஒன்னும் பண்ண மாட்டார்கள் கணினி ஆசிரியர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் திமுக வோண்டம்

    ReplyDelete
    Replies
    1. Ippa admk enna sathanai panni iruku
      2013 appurum oru posting poduruka sollunga

      Delete
  3. 2008 கொண்டு வந்து 2011 வரை என்ன செய்துள்ளார்கள். அதிமுக அரசுதான் 850 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணிணி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக மாற்றி கணிணி ஆசிரியர் மட்டுமே சுமார் 850 பேர் நியமனம் செய்யப்பட்டது. எனவே நன்றி மறக்க வேண்டாம்.திமுக ஆட்சியில் கணிணி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் நியமனம் செய்யப்பட்டது. 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் சுமார் நாற்பதாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் TRB மூலம் நிரப்பப்பட்டது.ஆனால் 2007 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் வெறும் 7500 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு சீனியாரிட்டி படி நியமனம் செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் 2012 ல் மட்டுமே tet தேர்வு மூலம் சுமார் முப்பதாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதன்பிறகு இதுவரை சுமார் இருபதாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. CS and IT technology SCHOOL EDUCATION la konduvanthathae dmk period. Think and vote 🗳

      Delete
  4. DMK vanthal computer science teacher posting conform

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி