ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2021

ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்!

பள்ளிக் கல்வி :



 மாநிலத்திட்ட இயக்குநர் கடிதத்தில் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , AWP & B 2021- 2022 ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு தேவையான முன் மொழிவுக di ( Proposals ) மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது , எனவே , AWP & B ] 2021- 2022 ஆண்டுக்கான ஆசிரிர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன் மொழிவுகளை ( Proposals ) அனுப்பிடும் வண்ணம் அறிக்கையினை தயார் செய்து உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் , ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு தேர்வு செய்யும் போது மலைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகள் ( Remote Areas ) முன்னுரிமை அடிப்படையிலும் முன் மொழிவுகளை ( Proposals ) இணைப்பில் உள்ளவாறு பூர்த்தி செய்து இச்செயல்முறைகள் கிடைத்த அன்றே idssed@nic.in மற்றும் n2sec.tndse@nic.in என்ற மின்னஞல் முகவரிகளுக்கு உரிய படிவத்தில் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 comments:

  1. Private teachers salary illama sagaranga ungalukku veedu katta mathiyarasu proposal ketkuthu... Nall government pa..... Enga vayitheritchal ungala vidathu

    ReplyDelete
    Replies
    1. நமக்கான உரிமையை நாம் தான் பெற வேண்டும், அழுத பிள்ளையே பால் குடிக்கும், இந்த வேலை வேண்டும் என தேர்வு செய்தது நாம், இப்பொழுது பிச்சை எடுப்பவன் கூட ஒருநாளைக்கு 500 ரூபாய் பார்க்கிறான்.. ஆனால் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் வருமானம் அப்படி கூட இல்லாத நிலை.

      ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒரு மாணவனிடம் வாங்கும் பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்கு மாதம் 20000 கூட தர மறுக்கிறது.. வேலை செய்வது நமது தவறு என்பது போல் உள்ளது...

      அனைவரும் ஒற்றுமையாய் இல்லை எனில் இதற்கு தீர்வே இல்லை ..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி