அரசு பள்ளி ஆசிரியை ரூ.1 லட்சம் கொரோனா நிவாரண நிதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2021

அரசு பள்ளி ஆசிரியை ரூ.1 லட்சம் கொரோனா நிவாரண நிதி

 


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நாகையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை, 1 லட்சம் ரூபாய் நிதி அனுப்பியுள்ளார்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு, சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வசந்தா, 51. அப்பகுதி மாணவ --- மாணவியர் மட்டுமல்லாது ஏழை, எளியவர்களுக்கும், தன் பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.கடந்த ஆண்டு, கொரோனா பரவலின்போது, முதல்வர் நிவாரண நிதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.


தற்போது, கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து, ஆசிரியை வசந்தா , முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தன் சொந்த பணத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை,'ஆன்லைன்' வாயிலாக அனுப்பியுள்ளார்.

23 comments:

  1. மனிதாபிமானம் உள்ளவர்கள் சிலர் மட்டுமே அனைத்து துறையிலும் இருக்கிறார்கள்.இவ்வலகத்தில் நல்லவர்களுக்கு ஆயுள் குறைவு.

    ReplyDelete
  2. நீங்க கடவுளின் அவதாரம்.

    ReplyDelete
  3. Super teacher🙏🙏🙏🙏எத்தனையோ அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தநல்ல மனம் இல்லை,

    ReplyDelete
    Replies
    1. First உனக்கு இருக்குதாடா அம்மி குளவி தலையா.

      Delete
    2. 😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  4. Awesome teacher.Great.your contribution is unique.All teachers are not having enough mind to contribute like you.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அம்மா. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனிலும் அக்கரை கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. உண்மைய சொல்லனும்னா பொழைக்கத் தெரியாத அம்மா போல... நாம வாழனும், நாம மட்டுமே வாழனும்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  8. எப்படித்தான் இருக்கிறது குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம்?! - ஓர் ஏக்கப்பதிவு
    ``நெடுந்தவத்தில் பள்ளிக்கூடம்..!"

    எப்போதோ கரும்பலகையில் வரையப்பட்ட படத்தில் கால் அழிந்துபோன யானையொன்று,

    முழுமை அடைய வேண்டி நீண்ட தவம் புரிகிறது!

    தூசுபடர்ந்த மேசையின் மேல் யாருக்கோ சலனமின்றிக் காத்திருக்கும் ஒற்றை சாக்குகட்டி,

    தன் தனிமை தாங்காமல் துகள் துகளாய் கரைகிறது!

    பள்ளி மாணவர்கள்vikatan
    மதிய விருந்துகளில் தன் சுற்றத்துடன் தவறாமல் கலந்துகொள்ளும் காகமொன்று,

    பரிமாற ஆளின்றி கரைந்து அழுகிறது!

    சுற்றுச்சுவர் ஓரம் நட்டுவைத்த மாங்கன்று, கல்லடிக்க ஆளின்றி காய் உதிராமல் உதிர்கிறது!

    வாயிற் கதவோரம் கதைகளுடன் நொறுக்குத்தீனி விற்ற பாட்டி,

    தீனியுடன் தன் அனுபவத்தைப் பங்குபோட ஆள்தேடி அலைகிறார்!


    அடிவாங்கி அடிவாங்கி நேரம் சொன்ன மணியொன்று, அடிக்க ஆளின்றி மௌனமாய் அழுகிறது!

    இடைவேளைப் பொழுதுகளில் சன்னல்வழி பழிப்பு காட்டி பாசமான அணில் ஒன்று, விளையாட ஆளின்றி வெறுமனே கிடக்கிறது!

    செல்லச் சண்டைகளில் வெள்ளைப்பூ தூவி சமரசம் செய்து வைத்த வேப்பமரம், லட்சம் பூக்களுடன் சண்டைக்குக் காத்திருக்கிறது!

    அரசுப் பள்ளி நா.ராஜமுருகன்
    மாலை வேளைகளில் தன் கூடடைய வரும் வலசை பறவையொன்று, விட்டு விடுதலையாகும் குழந்தைகளின் கூச்சலின்றி, தான் வந்த இடம் சரிதானா என்ற குழப்பத்தில் தவிக்கிறது!

    வகுப்பறை சுவரில் வரையப்பட்ட தேவதை பொம்மையொன்று, தன் சிறகு முளைத்த தோழியரைக் காணாமல் நெடுநாளாய் வடக்கிருக்கிறது!

    கையுடைந்த நாற்காலியும்,

    காலுடைந்த மேசையும் தங்கள் துயரத்தைப் பகிர்ந்த படி துவண்டு போய்க் கிடக்கின்றன!

    வெறுமை வகுப்பறையைக் கடந்து செல்லும் ஆசிரியர், அதன் அமைதி தாங்காமல் அவ்வப்போது உடைகிறார்!

    ஆயிரம் குழந்தைகளை அள்ளிச் சுமந்த பள்ளி, இன்று சுமக்க ஆளின்றி மனச்சுமையில் தவிக்கிறது!

    - அகன் சரவணன்

    ReplyDelete
  9. திருமதி வசந்தா ஆசிரியை அவர்களின் உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும்.அவர் நலமுடன் வாழ வேண்டும்.

    ReplyDelete
  10. Dear govt teachers please help to your students parents who are affecting unemployment during this pandemic because you are getting salary by the students.

    ReplyDelete
  11. அருமை...yenga manathil உயர்ந்து நிக்கறீங்க...👌👍👏👏👏

    ReplyDelete
  12. 👌👍👏அருமை ஆசிரியரே

    ReplyDelete
  13. அருமை அருமை...

    ReplyDelete
  14. கடவுள் என் கண்ணில் தெரிகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி