கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு - kalviseithi

May 20, 2021

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

 

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளை வெளியிட்டு மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு வெளியட்டுள்ளது. வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.  

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1 comment:

  1. கொரோனாவை தடுக்க சின்ன கைமருந்து தினமும் வெல்லபூடு உாித்து வெறும் வடைசட்டியில் போட்டு வறுத்து அதாவது 5 அல்லது 10குள்ள பூடுவை கடலை வறுப்பது போன்று பூடுவை வறுத்து சாப்பிடலாம்.இதயம் மற்றும் தொண்டையில் ஏற்படும் சில சலியை நிறுத்தும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி