கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம் - kalviseithi

May 20, 2021

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்

 

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவும்போது சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார மையம் பரிந்துரை  செய்திருந்தது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்தன. வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப உலக சுகாதார மையம் பரிந்துரைகளில் மாற்றம் செய்து வந்தது.


கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.


இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்திய அளவில் தினசாரி பாதிப்பில் முதல் ஐந்து இடத்திற்குள் இருக்கும் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.


ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல என வல்லுனர்கள் கூறிய போதிலும், மக்கள் அதை செவி கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் உலக சுகாதார மையம், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது.


ஏற்கனவே, இந்தியா கொரோனா தொற்றுக்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தது. தற்போது உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அறிவித்தால் இந்தியாவில் இனிமேல் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படமாட்டாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி