ஆசிரியர் மீது போக்சோ வழக்கு 2 டி.இ.ஓ., மீதும் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2021

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு 2 டி.இ.ஓ., மீதும் நடவடிக்கை

 

மதுரையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மதுரை, ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன், 45. இவர், 2020 ஜூலையில், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.மாணவியின் தந்தை மாநகராட்சி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இது குறித்து, கோதண்டம் என்பவர், 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருவர் சேர்க்கப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.இந்நிலையில், விஜயபிரபாகரனை, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, 'சஸ்பெண்ட்' செய்தார்.அவர் கூறுகையில், ''புகார் அளித்தவுடன், பெண்கள் பள்ளியில் இருந்து, ஆண்கள் பள்ளிக்கு விஜயபிரபாகரன் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில், கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,'' என்றார்.

5 comments:

  1. பொதுவாக கல்வித் துறை அலுவலர்களின் விசாரணை பூசிமெழுகும்வண்ணமாகவே அமையும்.

    மற்றொருபுறம்...
    சிங்கம் சிங்கதோடு மட்டுமே... யானை யானையோடு மட்டுமே...
    இல்லனா பிரச்சினை தான்...
    போக்சோவுல போய் மாட்டும்...

    ReplyDelete
  2. டேய் TRB fans club நாற வாயா... அடுத்தவங்களை பேசலன்னா உன் நாற வாயில பழையசோறு இறங்காதாடா ..

    ReplyDelete
    Replies
    1. Sankar ji இன்னும் நல்லா கூல் பண்ணுங்க.... குற்றவாளிங்கள குறை சொன்னா unknownக்கு ஏன் ஏறுது ...
      அயோக்கியனுக்கு துணை போறவன் தான் மிகப்பெரிய அயோக்கியன்னு சொலவடை உண்டு....
      நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே....
      தண்டனை கடுமையாகாத வரை லஞ்சமோ ஊழலோ பாலியல் தொல்லையோ தொடரும் ...

      Delete
  3. அடுத்தவங்களை பேச தான் comment box இருக்கு .... But unknown மாதிரி அநாகரிகமா பேச இல்ல...

    ReplyDelete
  4. Unknown பெயரில் பல பயனாளர்கள் கல்விச்செய்தியில் உலவினாலும் சிலர் சரியான முறையில் தனது ஆதங்க கருத்துக்களை நாகரிகம் பிறழாமல் பதிவிடுகின்றனர். சிலர் கூறுவதற்கு ஒன்றும் இல்லை... Unknownகள் தனித்தன்மையுடன் பெயரை மாற்றிக் கொள்ளும்போது எது பதரென்று அடையாளம் காண இயலும். இல்லையெனில் எல்லா unknownக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. சிற்சில ஆசிரியரால் பெரும்பான்மையினருக்கு அவப் பெயர் ஏற்படுவது போல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி