பிளஸ் 2 திருப்புதல் தேர்வு நடைமுறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - kalviseithi

May 15, 2021

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு நடைமுறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடர்பாக தலைமை யாசிரியர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் பள்ளித் தலைமையா சிரியர்களுக்கு வழங்கப்பட் டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் : பிளஸ் 2 வகுப்புக்கான திருப் புதல் தேர்வுகள் , முதன்மைக் கல்வி அலுவலகம் தயாரிக் கும் வினாத்தாள் , தேர்வுக்கால அட்டவணை அடிப்படை யில் தான் நடைபெற வேண்டும்.


தேர்வு வினாத்தாள்களை கட்செவி அஞ்சல் செயலி வழி யாக மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் . இதற்காக பாடவாரியாக பிரத்யேக வாட்ஸ் ஆப் குழு ஆசிரியர் தலைமையில் உரு வாக்கப்பட்டு , அதில் வினாத் தாளை பதிவேற்ற வேண்டும் . அதிலிருந்து வினாத்தாள்க ளைப்பதிவிறக்கம் செய்து பெற் றோர் முன்னிலையில் மாண வர்கள் தேர்வெழுத வேண்டும். தேர்வு முடிந்தபின் விடைத் தாள்களில் பெற்றோரி டம் கையொப்பம் பெற்று , அவற்றை ஸ்கேன் செய்து ஆசி ரியருக்கு அனுப்ப மாணவர்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும் . அதேபோல் , விடைத்தாள்க ளின் அசல் பிரதிகளை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டும் . ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்ட விடைத் தாள்களை திருத்தம் செய்து , மதிப்பெண்கள் வழங்க வேண் டும் . இந்தபணிகளை ஜூன் மாதத் துக்குள் முடித்து , அதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி