தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2021

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்"

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் புதிதாக ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று (மே 25) 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில்,


* சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.


* சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறையில் முதன்மை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.


* சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


* ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.


* நேற்று காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


* தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


* மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி