ஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2021

ஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்

 

ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என்ற கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பதில் அளித்தார்.

மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமலங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று (மே 20) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், "சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் ஜூன் மாத இறுதியில் நிறைவடையும் என்றும், 2-ம் கட்டப் பணிகள் 3 மாதங்களிலும் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ஆணையராக மாற்றியது தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார்.

கரோனா தொற்று குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.

ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கருத்துகள் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன். இதுகுறித்து, முதல்வருடன் ஆலோசித்து, அவர் கூறும் ஆலோசனையின்படி அறிவிக்கப்படும்" என்றார்.

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கூறும்போது, "அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினை தொடர்பாக, சட்டப்பேரவையில் பல முறை பேசியுள்ளேன். அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்" என்றார்.

முன்னதாக, மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை வரை கிடைத்த நாட்களை, கரோனா பரவலைத் தடுக்க முந்தைய காபந்து அரசு சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. கரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தொலைநோக்குப் பார்வையுடன் தீவிரமாகக் களப் பணியாற்றி வருகிறது. நகர்ப்புறங்களில் நடத்தப்படுவதுபோல், கிராமப்புறப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மணப்பாறை பி.அப்துல்சமது, திருச்சி கிழக்கு எஸ்.இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

80 comments:

  1. இது சரியான முடிவு..கடந்த ஒண்டரை வருடமாக வேலை செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டே முழு சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை 50% மட்டும் வழங்கி... மீதமுள்ள 50% பணத்தை சுமார் மாதத்திற்கு 2250 கோடி பணத்தை.. உயிரை பனையம் வைத்து வேலை செய்யும்.. மருத்துவர், செவிலியர், காவல்துறை, துப்புரவு பணியாளர்.. வருவாய்த்துறை, ஊராகவளர்ச்சி துறை... போன்ற முன் கள பணியாளருக்கு.. இரட்டை ஊதியம் வழங்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. உனக்கு என்ன வலிக்குது

      Delete
    2. Unaku yennatha valikkuthu veetla vettiya utkanthu thinguralla

      Delete
    3. பிறர் வாழ நாம் மகிழ வேண்டும் not like satist thinking 🤐

      Delete
  2. மன்னிக்கவும்...ஆசிரியர் யாரும் வேலைக்கு வர மாட்டோம் என்று கூற வி‌ல்லை.... பள்ளிகள் திறக்கவும் .. நாங்கள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த தயார்....

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமையான பதிலடி...

      Delete
    2. அதேதான் அரசின் நிலைைமையும். மக்களிடம் இருந்து வரேவேண்டிய வரிப்பணம் குறைந்துவிட்டது. நாங்கள் என்ன பன்னுவது என்று

      Delete
    3. அப்படியே நடத்திட்டாலும்

      Delete
  3. இப்படி சிலர் காரணம் சொல்றங்க...
    போகாத வேலைக்கு எதற்குச் சம்பளம்?
    இதுதான் இங்கு 1000டாலா் கேள்வியானால்!

    1) வேலைக்குப் போக ஆசிாியா்கள் மறுத்தாா்களா? வேலை செய்ய வேண்டாம் என்று தடுக்கப்பட்டாா்களா?

    2) வேலை செய்வதற்கு வர மறுத்தால் வேலையில்லை-கூலி இல்லை என்று சம்பளத்தைப் அரசு பிடிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது.

    3) தற்காலிகமாக வேலைக்கு வரவேண்டாம் என்று அரசுதான் உத்திரவிடுகிறது. இதில் ஊழியா்கள் தவறு உண்டா? அழைக்கும் போது பணிக்கு வருவதற்கு தயார்நிலையில் இருக்க வேண்டும். எனில் சம்பளத்தை எவ்வாறு நிறுத்த இயலும்? இதில் மூன்றாம்நபா்கள் கேள்வி கேட்பது சாியாகுமா?

    4)கிரிகெட் போன்று எல்லாவிதமான விளையாட்டிலும் பங்கேற்கும் வீரா்களுடன் கூடுதலாக மாற்று என்று சிலா் தயாா்நிலையில் வைக்கிறாா்கள். அவா்கள் பங்கேற்காவிடிலும் பதக்கம், பாிசு, பட்டம், சம்பளம், தகுசிச்சான்று எல்லாம் வழங்கப்படுவதை அறியாதவா்கள் உண்டா? கேள்வி கேட்பது????

    5) காவல்துறையில் ரிசா்வ்- என்று பல ஆயிரம்போ் தயாா்நிலையில் இருப்பில் வைக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது.

    6) IAS & IPS அதிகாாிகள் இடமாற்றம் செய்யும்போது உடனே பணியிடம் வழங்காமல் மாதக்கணக்கில் காத்திருப்போா் பட்டியலில் வைத்து சம்பளம் வழங்கப்படுவதில்லையா?
    இப்படி உதாரணங்கள் கூறிக்கொண்டே போகலாம்.

    7. சட்ட மன்ற உறுப்பினர்கள் 6 மாசத்துக்கு ஒரு தடவ கையெழுத்து மட்டும் போட்டுட்டு சபை நடவடிக்கைகளில் பங்கு பெறாம சம்பளம் வாங்குறாங்களே அது என்ன கணக்கு..
    சட்டமன்ற உறுப்பினர்கள் சுயலாபத்திற்காக பதவிகாலத்திற்கு முன்னரே பதவி விலகி இடைத்தேர்தல் நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கறாங்கலே அது தெரியலையா

    கோரோனா-அசாதரண காலங்களில் அரசு நிா்வாகக் காரணங்களால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிாியா்கள் பணிக்கு வரத் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளாா்கள். இவா்கள்மீதுமட்டும் காழ்ப்புணா்ச்சியோடு சேற்றைவாாி இறைப்பது ஏற்புடையது ஆகுமா?
    மருத்துவர் இல்லை என்றால் பிணம்
    ஆசிரியர் இல்லையென்றால் நடை பிணம்

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள்.

      Delete
    2. தனியார் பள்ளி ஆசிரியர்கைளை நம்பி அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்ைதைகளை எப்ோது சேர்த்தீர்களோ அன்றிலிருந்து நீங்கள்தான் நடைபிணம்

      Delete
    3. மிகச்சரி கொஞ்ச காலமாக ஆசிரியர்கள் மட்டும் தாக்கப்டுகிறார்கள்.இலஞ்சம் வாங்கும் எத்தனையோ துறைகள் உள்ளது..

      Delete
    4. அதே சட்டமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்துவதும் நீங்கள்தான். வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் ெகாள்ளாதீர்கள்

      Delete
  4. ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குங்கள்...

    ReplyDelete
  5. தமிழக அரசு நிதி தர முன்வாருங்கள் என்று ெசால்கின்ற நிலைக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் கூட ஆசிரியர்கள் இப்படி ேசுவது நியாமல்ல. சமீபகாலமாக ஆசிரியர்கள் அரசியல்வாதிகளை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

    ReplyDelete
  6. சென்ற ஆண்டு ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேசியது.ேர்தல் வருவதால் நமக்கு சம்பளத்தில் கைவைக்கவில்ைலை என்று

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் சொந்தமாக வீட்டில் வாழ்ந்தாலும் பொது வங்கியிலோ அல்லது தனியார் வங்கியில் தான் கடனாகப் பெற்று அதை கட்டியிருக்கிறார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் எனில் முழு சம்பளம் வரும் வரை எந்த ஒரு வங்கியும் தங்களது கடனுக்கான தவணை வசூலிக்கப்பட மாட்டாது என வங்கிகளிடம் ஒரு கோரிக்கை வைத்து அது பரிசீலிக்கப்படவேண்டும்.அதன்படி 50% குறைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் குறைக்க கூடாது என்பதற்கு இது ஒரு சாக்கு... Mr.Mirna...

      Delete
    2. அந்த காலத்தில் வாங்கிற சம்பளத்திற்கு தகுந்தாற்ேரல் ெசலவு செய்தார்கள். ஆனால் இப்போது வாங்கப்ேரற சம்பளத்திற்கு இப்போேதே செலவு செய்கிறார்கள். | நாம் சும்மா இருந்தாலும் வங்கி நம்மிடம் ஆசைகாட்டிவிடுகிறது. EMI

      Delete
  8. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துவிடும். அதுவே நம்மால் தாக்குபிடிக்க முடியவில்லை என்றால்....1 1/2 ஆண்டு காலமாக சம்பளமே இன்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை என்ன சொல்வது...நாடும் ஒரு குடும்பம் போன்றதே....குடும்ப கஷ்டத்தில் நாமும் பங்கெடுப்போம்... கொஞ்சம் கஷ்டம் தான்....அது கொஞ்ச காலம் தான்....வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டோர் மத்தியில் ஆடம்பரம் பாதிக்கப் படுகிறது என கூச்சலிடுவது நாகரிகம் அன்று...மனமுவந்து கொடுப்போம்....இனியாவது ஆசிரியர்களை எதிரியாக நினைப்பதை இந்த சமூகம் மாற்றிக் கொள்ளட்டும்....

    பள்ளி திறக்கப்படும் நாள் வரை எனது ஊதியத்தில் பாதியை அளிக்க நான் சம்மதிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Thanks rajarajan. Nanum oru govt servent.

      Delete
    2. நானும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான். PG என்பதால் சிறிதுகாலம் பள்ளிக்கு சென்ேnம். இருந்தாலும் மனசாட்சி உருத்துகிறது. 50% ok

      Delete
    3. மனசாட்சி உருத்துனா 100% சம்பளத்த கொடுங்க சார்

      Delete
    4. வச்சா குடுமி அடிச்சா மொட்ைடை அப்படிதானே

      Delete
    5. 50% பற்றி பேசிக் ெகாண்டிருக்கும்ோது 100% எப்படி

      Delete
  9. ஆசிரியர்கள் தெய்வமாக கருதப்பட்ட காலம் கடந்து,வெறுப்புணர்வோடு மக்கள் பார்க்கும் காலமாக மாறிவிட்டது.இதற்கு ஒரு சில ஆசிரியர்கள் காரணமாக இருக்கலாம்.ஆனால் எத்தனையோ ஆசிரியர்கள் கடந்த வருடம் ஏழைகளாகிய நமக்கு பண உதவி மற்றும் பொருளுதவி செய்தனர். கடந்த வருடம் எங்க குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியில மாணவர்களுக்கு போன் போட்டு கடைசி வரை பாட சந்தேகங்கள தீர்த்து வச்சாங்க.நம் பிள்ளைங்களுக்கு ஆசிரியர்கள் தான் தெய்வங்க. டீச்சர்களை நாங்க கண்கண்ட தெய்வமா தான் நாங்க பார்க்கிறோம். நாங்க கூலி வேல செய்தாலும் எங்க பிள்ளைங்களுக்கு அவங்க தான் வழிகாட்டி. அவங்க நல்லா இருந்தா தான் நாடு நல்லாகும். அவங்க மனசாட்சி காயப்படுத்தக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஒருசில இல்லை பலர்

      Delete
  10. சம்பளத்த குறைக்கனும் என்று முடிவு செய்தால் அனைத்து அரசு ஊழியர்கள் களுக்கும் சம்பளத்தை 50% குறைக்க வேண்டும்.மற்ற ஊழியர்கள் போல ஆசிரியர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.வங்கியில் கடன் இருக்கிறது. அந்த அளவுக்கு நிதி நிலமை மோசமா போகிறதா

    ReplyDelete
    Replies
    1. எது எப்படியோ அரசு ஏதாவது நமக்கு பாதகமாக முடிவு எடுத்தால் நீதிமன்றத்திற்ெல்லாம் செல்ல முடியாது.

      Delete
    2. நீங்கள் செய்தி படிப்பதில்லையா

      Delete
    3. Asiriyar / perasiriyar thavira anaithu thuraiyinarum paniyatri varukinranar... 50% matra thuraiyinaridam kettal seruppai sabaiyil mukki adippaargal...

      Delete
  11. ஆசிரியர்கள் எல்லாரையும் நாடு கடத்த சொல்லுங்க.
    ஐயா,நீங்க ஆசிரியர்களை இப்படி இழிவாக பேசுவதால் தான் உங்க பிள்ளைங்க உங்கள் எதிர்க்கிறாங்க. கலைஞர் அவர்கள் ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்தியதால் அவரது பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். புரிஞ்சா; இது தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளிஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் இழிவு யாருக்கு

      Delete
    2. அரசு ஊழியருடைய பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற அரசு ஏன் மறுக்கிறக்கிறது? சட்டத்தை பிறப்பித்தால் நல்லதே

      Delete
  12. அரசு செய்முறைத்ேர்வு நடக்கும் சமயத்தில் மாணவர்களை பற்றி கவலைப்படாமல் போராட்டம் நடத்தியது இழிவானெ செயல்

    ReplyDelete
  13. எப்பொழுது பார்த்தாலும் ஆசிரியர்கள் சம்பளம் பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறவன் நினைக்கிறவன் ....அவன்.. குடும்பம் என்றைக்கும் தழைக்காது.. இப்படி பேசிக்கொண்டு இருப்பவர்கள் பொறாமை பிடித்தவர்கள்... பொறாமை பிடித்தவர்களுக்கு எல்லாம் அழிவு நிச்சயம்... விதை நெல்லுக்கு கணக்கு பார்த்தால் விளைச்சல் இருக்காது... ஆசிரியர்கள் சம்பளம் விதை நெல்லை போன்றது...

    ReplyDelete
    Replies
    1. தனியார் விதை நெல்லா அரசு விதை ெநல்லா

      Delete
    2. உண்மை உங்களுக்கு ே கவலமாக தான் இருக்கும்

      Delete
    3. ஆசிரியருக்கு வழங்கப்படும் ஊதியம் விதைநெல்லைப்போன்றது உண்மைதான்.,
      அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கப்படுவதாக நெடுங்காலமாக கூறப்பட்டுவருகிறதே?

      Delete
  14. எப்பொழுது பார்த்தாலும் ஆசிரியர்கள் சம்பளம் பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறவன் நினைக்கிறவன் ....அவன்.. குடும்பம் என்றைக்கும் தழைக்காது.. இப்படி பேசிக்கொண்டு இருப்பவர்கள் பொறாமை பிடித்தவர்கள்... பொறாமை பிடித்தவர்களுக்கு எல்லாம் அழிவு நிச்சயம்... விதை நெல்லுக்கு கணக்கு பார்த்தால் விளைச்சல் இருக்காது... ஆசிரியர்கள் சம்பளம் விதை நெல்லை போன்றது...

    ReplyDelete
    Replies
    1. இப்படிெல்லாம் பேசுவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல

      Delete
  15. ஆசிரியர் ஓராண்டாகவேலைக்கு வரவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு

    ReplyDelete
  16. ஆசிரியர்கள் நம்முடைய பண்பை இழக்க வேண்டாம்.
    நல்லவங்க தரக்குறைவாக நடக்கமாட்டார்கள். ஊருக்கும் வேண்டாம்;நாட்டுக்கும் வேண்டாம் என்பவர்களே இவ்வாறு ஆசிரியர்களை அவமதிப்பார்கள்.அமைதியாக இருப்போம்.நல்லதே நடக்கட்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தான்.ஏதோ நாம் மிக ஆதங்கப்பட்டோம் தேர்தலில்.நாம் நினைத்தது நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைத்ததினால் நடக்கவில்ைல மக்கள் ஓட்டு ோாடு நடந்தது

      Delete
    2. ஓர் ஆசிரியரின் வாக்கு வங்கி என்பது 1 அல்ல, மாறாக 25 -லிருந்து 35 -வரை. புரிந்துக்கொள்ளுங்கள்.

      Delete
    3. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே கட்சிக்கு ஓட்டு ோடுவார்கள் என்ெறெல்லாம் ொல்ல முடியாது.

      Delete
    4. அது உங்கள் கணக்கு !

      Delete
  17. ஆசிரிய ஆசிரியைகள் ஜோடிகளாக தான் வாழ்கிறார்கள்.. சம்பளத்தை குறைப்பதால் அவர்களின் தொப்பை கறைந்து விட போவதில்லை. அதிலும் அந்த குண்டச்சிகளின் ஆட்டமும் அடங்கப் போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Intha thalathil comments post pandrathunala eduvum nadakka poavthillai, poi velaya parungada

      Delete
    2. இதுபோன்ற‌ இழிவான‌ சொற்க‌ளைப் பய‌ன்ப‌டுத்தியும் க‌ல்விச் செய்தி அமைதி காப்ப‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌து...
      ஆசிரிய‌ர்க‌ளை அவ‌ம‌திக்கும் ச‌மூக‌ம் அழிவை நோக்கியே செல்லும்..

      Delete
    3. அந்த காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை பற்றி சிந்தித்தார்கள். இக்கால ஆசிரியர்கள் தன்னை பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள்.

      Delete
    4. கொரே னாவால் அழிவு. Please avoid useless words. Help the people who r swinging between life and death

      Delete
    5. தரம்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்
      நீங்களும் ஆசிரியர்களிடம் படித்து வந்தால்தான் என்பதை மறக்க வேண்டாம்

      Delete
    6. ஆசிரியர்கள் செழித்து வாழ வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

      Delete
  18. கொரே னாவால் அழிவு

    ReplyDelete
  19. ஒரு ஆசிரியர் பற்றி பேசுவது இன்னொரு ஆசிரியர் தான்,,,,எதிரிகள் வெளியே இல்லை,,,இது எல்லாம் ஒரு வகை வெளிபாடுகள் தான் ,,,,,இப்போது எல்லாம் நிலையான வேலை இல்லாதவர்கள் அரசு ஊழியர்கள் பார்த்து உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்குகிறார்,,,என்று தப்பாக சொல்லுகிறார்கள்,,,,,கொரனோ காலத்தில் அவரவர் ஆயிரம் கஷ்டம்,,நீங்கள் என் இடத்தில் பார்த்தால் கஷ்டம் புரியும்,,,நான் உங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் அந்த கஷ்டம் புரியும்,,,,,ஆசிரியர் பற்றி பேசுவது தவறு , ,,,இன்று அரசு ஊழியர்கள் பற்றி நீங்கள் பேசும் போது,, , இதே போன்று நாளை நீங்களும் அரசு ஊழியர்கள் ஆக வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்,,,,,

    ReplyDelete
  20. ஆனால் ஒன்று தனியார் பள்ளிகளின் வளர் ச்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் பங்கு மறைமுகமாக அதிகமாக உள்ளது.

    ReplyDelete
  21. ஐயா, ஆசிரியர்கள் ஊதியத்தை எடுத்து தான் நிவாரணம் கொடுக்க வேண்டுமா? ஊரான் கடைத் தேங்காயை எடுத்து தான் வழி பிள்ளையாருக்கு உடைக்க வேண்டுமா? இப்படி ஐடியா கொடுக்கிற ஆள், விலை இல்லா பொருட்களை வாங்காமல் இருக்கலாம். எவ்வளவோ பணம் வீணாக போகிறது.. அதெல்லாம்.. உமது கண்களுக்கு தெரியவில்லை யா???

    ReplyDelete
    Replies
    1. ஊரான் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் ெொள்வது நீங்கள் தான். on line Class இப்போது ேண்டுமானால் failure ோால் ேதான்றலாம். ஆனால் ஒரு நாள் அது தான் மாணவர்களுக்கு Sucesses ஆகப்போகிறது.

      Delete
    2. நீ அரசுக்கு எவ்வளவு வரி செலுத்தி வர.நீ இலவசங்கல அனுபவிக்க வில்லையா?

      Delete
  22. கடந்த பதினைந்து மாதங்களாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுபவித்து வருகிற இன்னல்களை இப்பொழுதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் புரிந்து கொள்வார்களென நினைக்கிறேன். பொதுவாக அரசு,தனியார் பள்ளி ஆசிரியரகள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருமித்து செயல்படுவதை
    யே இந்த நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

    ReplyDelete
  23. தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தில்25%மட்டும் பிடித்து அதை இவ்வகை பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தது நிலமை சீராகும் வரை 3000ரூபாய் நிவாரண உதவியாக கொடுக்கலாம்.இச்சமுதாயம் மேம்பட இன்னும் சொல்லப்போனால் சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய சிற்பிகள் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.மிகவும் குறைந்த சம்பளத்தில் தன் குடும்ப கஷ்டத்திற்காக உழைத்தவர்கள் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ முன்வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி நடத்தும் முதலாளிகள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும். அரசு பொறுப்பல்ல.மாணவர்களிடம் கொள்ளையடித்து ஆடம்பரமான கட்டடங்கள் பல கட்டி, ஏராளமான பேருந்துகள் வாங்கி,ஏராளம் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகியுள்ளனர்.இக்கட்டான இக்காலத்திலும் மாணவர்களிடமிருந்து அதிகமாக சுரண்டியுள்ளனர்.இந்த உண்மையை தயவுசெய்து மறைக்க வேண்டாம்.

      Delete
    2. ஏதோ ஒரு சில பெரிய பள்ளிகள் இப்படி செய்வதால் எல்லா பள்ளிகளும் கொள்ளையடிப்பதாகச் சொல்வது யதார்த்தை பார்க்க மறுக்கும் போக்காகும்.

      Delete
  24. அ,ஆ தெரியாமல் Online class ரொம்ப சக்ஸஸ் ஆயிடும்...எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...மாதா,பிதா, குரு, தெய்வம்...என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது...வம்பு பேசினால் வளர்ந்து கொண்டே போகும்...நடப்பது நடக்கட்டும்.ஆண்டவன் எல்லோருக்கும் எவ்வளவு படி அளப்பானோ அவ்வளவு அளப்பான்.. எவராலும் அதை தடுக்க முடியாது.. நாங்கள் இந்த நிலைக்கு வந்த கஷ்டம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம் சொன்னால் நேரம் தான் வீணாகும்.So Time is gold.நான் ரொம்ப bold.எவர் என்ன சொன்னாலும் I Don't Care...

    ReplyDelete
  25. நடப்பதெல்லாம் நன்மைக்கே
    சொல்வதெல்லாம் அவர் அவர் சுகத்துக்கே.

    ReplyDelete
  26. அரசு பள்ளி ஆசிரியரின் சம்பளத்தை பாதியாக குறைக்கலாம்.. அதற்கு முன் இங்கு குரைக்கும் தற்குறிகள் தனியார் பள்ளி முதலாளிகளை கேள்வி கேட்கும் திரானி இருக்கா.. மாணவர்களிடம் வாங்கும் 50 சதவீத கட்டணத்தை லாபம் பார்க்காமல் ஆசிரியருக்கு கொடுக்க சொல்லி போராட அல்லது முயற்சி செய்யாத கோழைகள் இங்கு வந்து கத்தி என்ன பயன்...

    ReplyDelete
  27. உஙஂக வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்

    ReplyDelete
  28. *ஆசிரியர்கள் சம்பளத்தைக் கண்டு கதறுவோருக்காக ஓர் பதிவு* :
    ஆசிரியர்கள் ஐம்பது வயது வரை கூட படித்துக் கொண்டுள்ளனர், ஓய்வு பெறும் வரை பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    ஆனால் படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு பள்ளி பக்கம் ஒதுங்காமலும், வேலைக்குப் போகிற காலத்தில் வெட்டியாக காலந்தள்ளியும் காலச்சக்கரத்தில் ஓடும் பலருக்கு கண் உறுத்தலோ ஆசிரியர் சம்பளம். இன்னும் இந்த வயிற்றெரிச்சல் படும் கூட்டத்தை பலவகையாக வகைப்படுத்தலாம். நாகரீகம் கருதி குறிப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு செல்வதையே ஒருசாரார் சற்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று சம்பளத்தைக் கண்டு கூப்பாடு போடுகிறார்கள்.

    ஒரே பள்ளியில் படித்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா முன்னேறி வாழ்கிறார்கள். அவரவர் படிப்பிற்கு செலவிட்ட நேரம், உழைப்பு அவரவர்களை உயர்த்தி இருக்கிறது.

    வயிறெரிவோர் டயலாக்கில் ஒன்று மக்கள் வரிப்பணத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் என்று... ஆனால் இந்தக் கூட்டம் என்ன வரி செலுத்தியிருக்கும் என்று பார்த்தால்......

    மேலும் விடுமுறையை அறிவித்தது அரசாங்கம். ஆசிரியர்கள் வர இயலாது எனச் சொல்லவில்லை என்பதை ஓட்டுப் போட மட்டும் அரசுப்பள்ளிக்கு வருவோர் கவனிக்கனும். ஆசிரியர்கள் தினக்கூலி அல்ல. இங்கே டெண்டர் உடன் ஒப்பிட விரும்புகிறேன். டெண்டர் முடிவானபின்னர் விலை மாற்றங்களுக்கேற்ப விலையை மாற்ற முடியாது, அதன் காலம் வரை ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். அதுபோலவே ஆசிரியர்கள் பணியேற்ற பின் பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க இயலாது என்பதை கதறுவோர் கவனிக்கனும்.

    இன்று புதிதாக ஆசிரியர் பணியில் சேருவோர் வருமானவரி கட்டுமளவிற்குக்கூட அவர்களது சம்பளம் இருக்கவே வாய்ப்பில்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களது சம்பளத்தை கணக்குப் பார்ப்பது வேடிக்கையானது. பத்தாயிரம் வைத்து குடும்பம் நடத்தும் பலர் இருக்கிறார்கள் என மேதாவிகள் பதிவுகளில் காணமுடிகிறது. இந்த அறிவெல்லாம் இருக்கு, ஆனால் படிக்கிற காலத்தில் படிக்க அறிவு இல்ல... ஏன் அங்கே வரை.... இப்போது அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவே வலிக்குது இதுபோன்ற மேதாவிகளுக்கு..... மாஸ்க் போடாம சுத்திக்கிட்டு, கடைத்தெருவில் முண்டியடித்துக் கொண்டு... கவனமும் கணக்கும் ஆசிரியர்கள் சம்பளம் மீது... இதெல்லாம் என்னய்யா பொழப்பு.... வாத்தியார் சம்பளத்தை பாதியாக்கினால் எல்லோருக்கும் பத்தாயிரம் கொடுக்கலாம் என பொருளாதார நிபுணத்துவ ஆலோசனை வேறு...

    கல்வி கரை சேர்க்கும். அதைத் தவறவிட்டவன் தவளை மாதிரி கத்த வேண்டியது தான். இப்போதும் மோசமில்லை. இப்போது திட்டமிட்டு உழைத்து உருப்பட வழி தேட வேண்டும் வயிறெரியும் கூட்டம். பக்கத்து வீட்டுக்காரன் வசதியாக இருக்கிறான் எனில் அதற்காக அவன் உழைத்த உழைப்பை உற்றுப்பார்க்க வேண்டும், அவன் ஏதாவது கொடுப்பான் என்றோ அல்லது அவனிடம் பாதியைப் பிடுங்கி பத்துபேருக்கு கொடுக்கலாமே என கீழே படுத்து விட்டத்தைப் பார்த்து கணக்குப் போட்டு கதறுவது கடைசியில் ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாத நிலைமைக்கு கொண்டுபோய்விடும். அப்புறம் ஆசிரியர்கள் எங்களுக்கு பாதி ரீசார்ஜ் பண்ணிவிடலாமே எனக் கேட்கத் தோன்றும். இப்படியே போய் ஒரு பயனும் இல்லை. இருக்கிற காலத்தில், ஆசிரியர் சம்பளத்தைக் கண்டு கதறுவோரே, ஆகவேண்டியதைப் பாருங்கள்.

    ReplyDelete
  29. *ஆசிரியர்கள் சம்பளத்தைக் கண்டு கதறுவோருக்காக ஓர் பதிவு* :
    ஆசிரியர்கள் ஐம்பது வயது வரை கூட படித்துக் கொண்டுள்ளனர், ஓய்வு பெறும் வரை பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    ஆனால் படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊரைச் சுற்றிவிட்டு பள்ளி பக்கம் ஒதுங்காமலும், வேலைக்குப் போகிற காலத்தில் வெட்டியாக காலந்தள்ளியும் காலச்சக்கரத்தில் ஓடும் பலருக்கு கண் உறுத்தலோ ஆசிரியர் சம்பளம். இன்னும் இந்த வயிற்றெரிச்சல் படும் கூட்டத்தை பலவகையாக வகைப்படுத்தலாம். நாகரீகம் கருதி குறிப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு செல்வதையே ஒருசாரார் சற்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று சம்பளத்தைக் கண்டு கூப்பாடு போடுகிறார்கள்.

    ஒரே பள்ளியில் படித்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா முன்னேறி வாழ்கிறார்கள். அவரவர் படிப்பிற்கு செலவிட்ட நேரம், உழைப்பு அவரவர்களை உயர்த்தி இருக்கிறது.

    வயிறெரிவோர் டயலாக்கில் ஒன்று மக்கள் வரிப்பணத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் என்று... ஆனால் இந்தக் கூட்டம் என்ன வரி செலுத்தியிருக்கும் என்று பார்த்தால்......

    மேலும் விடுமுறையை அறிவித்தது அரசாங்கம். ஆசிரியர்கள் வர இயலாது எனச் சொல்லவில்லை என்பதை ஓட்டுப் போட மட்டும் அரசுப்பள்ளிக்கு வருவோர் கவனிக்கனும். ஆசிரியர்கள் தினக்கூலி அல்ல. இங்கே டெண்டர் உடன் ஒப்பிட விரும்புகிறேன். டெண்டர் முடிவானபின்னர் விலை மாற்றங்களுக்கேற்ப விலையை மாற்ற முடியாது, அதன் காலம் வரை ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். அதுபோலவே ஆசிரியர்கள் பணியேற்ற பின் பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க இயலாது என்பதை கதறுவோர் கவனிக்கனும்.

    இன்று புதிதாக ஆசிரியர் பணியில் சேருவோர் வருமானவரி கட்டுமளவிற்குக்கூட அவர்களது சம்பளம் இருக்கவே வாய்ப்பில்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களது சம்பளத்தை கணக்குப் பார்ப்பது வேடிக்கையானது. பத்தாயிரம் வைத்து குடும்பம் நடத்தும் பலர் இருக்கிறார்கள் என மேதாவிகள் பதிவுகளில் காணமுடிகிறது. இந்த அறிவெல்லாம் இருக்கு, ஆனால் படிக்கிற காலத்தில் படிக்க அறிவு இல்ல... ஏன் அங்கே வரை.... இப்போது அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவே வலிக்குது இதுபோன்ற மேதாவிகளுக்கு..... மாஸ்க் போடாம சுத்திக்கிட்டு, கடைத்தெருவில் முண்டியடித்துக் கொண்டு... கவனமும் கணக்கும் ஆசிரியர்கள் சம்பளம் மீது... இதெல்லாம் என்னய்யா பொழப்பு.... வாத்தியார் சம்பளத்தை பாதியாக்கினால் எல்லோருக்கும் பத்தாயிரம் கொடுக்கலாம் என பொருளாதார நிபுணத்துவ ஆலோசனை வேறு...

    கல்வி கரை சேர்க்கும். அதைத் தவறவிட்டவன் தவளை மாதிரி கத்த வேண்டியது தான். இப்போதும் மோசமில்லை. இப்போது திட்டமிட்டு உழைத்து உருப்பட வழி தேட வேண்டும் வயிறெரியும் கூட்டம். பக்கத்து வீட்டுக்காரன் வசதியாக இருக்கிறான் எனில் அதற்காக அவன் உழைத்த உழைப்பை உற்றுப்பார்க்க வேண்டும், அவன் ஏதாவது கொடுப்பான் என்றோ அல்லது அவனிடம் பாதியைப் பிடுங்கி பத்துபேருக்கு கொடுக்கலாமே என கீழே படுத்து விட்டத்தைப் பார்த்து கணக்குப் போட்டு கதறுவது கடைசியில் ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாத நிலைமைக்கு கொண்டுபோய்விடும். அப்புறம் ஆசிரியர்கள் எங்களுக்கு பாதி ரீசார்ஜ் பண்ணிவிடலாமே எனக் கேட்கத் தோன்றும். இப்படியே போய் ஒரு பயனும் இல்லை. இருக்கிற காலத்தில், ஆசிரியர் சம்பளத்தைக் கண்டு கதறுவோரே, ஆகவேண்டியதைப் பாருங்கள்.

    ReplyDelete
  30. யோ admin வதந்திய கிளப்பி குளிர் காயாதயா

    ReplyDelete
  31. அருமையான ஐடியா!
    பஸ் ஓடாம இருப்பதால் டிரைவர் கண்டக்டர் சம்பளத்தை நிறுத்தி விடலாம்.
    வங்கி 2 மணி நேரம் மட்டுமே வேலை.(9 -11). எனவே அவர்களின் சம்பளத்தையும் அவசியம் குறைப்பதுதான் நியாயம்.
    election முடிந்தபின் எங்கும் சாலைப்பணி நடக்கவில்லை. எனவே அவர்களது சம்பளமும் கட்.
    அனைத்து கீழமை நீதிமன்றங்களும் தற்போது செயல்படவில்லை. எனவே அவர்களது சம்பளம் கட் நியாயம்தான்.
    டாஸ்மாக் மூடியாச்சு. சம்பளம் கட் பண்ணலாம்.
    நாட்டு நிலைமையே சரியில்லை. இந்த லட்சணத்தில் காட்டு இலாகாவுக்குச் செலவெல்லாம் சுத்த வேஸ்ட்..
    ஊரே அடங்கிக் கிடக்கும்போது ஊர்சுற்றிப் பார்க்கும் சுற்றுலாத்துறைக்கு ஏன் செலவு செய்யணும்?
    போர் இல்லாத நாள்களுக்கு இராணுவத்தினருக்குக் கொஞ்சம் ஊதியம் குறைத்துக் கொடுத்தால் தப்பாங்க அது?
    சுகாதாரப் பணியே தலைக்கு மேல இருக்கு.
    இந்த லட்சணத்தில் சும்மா இருக்கிற பொதுப்பணித்துறைக்குக் கொஞ்சம் குறைச்சா யாரும் தப்புண்ணு சொல்லமாட்டாங்க.
    மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். இவங்க இரண்டு பேருக்காகத்தான் பள்ளிக்கூடம், கல்லுரி இதெல்லாம்.
    இவர்களை நிர்வாகம் பண்ண ஊதியம் வழங்க இதற்குத்தான் BEO, DEO,CEO,DIRECTOR, COMMISSIONER, SECRETARY இத்தனைபேரும்.
    கல்விப் பணியே நடக்காதபோது இத்தனை அதிகாரிகள், பணியாளர்கள் இவர்களின் ஊதியமும் வீண்தானே!
    அப்படியானால் ஒரு துறையே இயங்காதபோது அதற்கென ஒரு கல்வி அமைச்சர் தேவையா என்று சிலர் கேட்டாலும் அதிலும் உண்மையில்லாமல் இல்லை.
    இவை ஒருபுறம் இருக்கட்டும்.
    ஜவுளிக்கடை மூடியிருக்கு. நூற்பாலை , துணியாலைகள் இயங்கவில்லை.
    இந்நிலையில் ஜவுளித்துனற தேவையில்லை என்பது நியாயம் தான். செலவு குறையும்.
    ஏங்க தொழிற்சாலைகள் மூட்க்கிடக்கு. தொழிலாளிகளுக்கு வேலையில்லை. அவர்களுக்கு ஊதியம் கொடுத்தால் வெட்டிச் செலவுதான். எனவே தொழில் துறையையும் மூடிவிட்டு அந்தப் பணத்தை முன் களப்பணியாளர்களுக்குச் செலவழித்தால் அது தவறில்லைதானே?
    மக்களுக்கும் வருவாய் இல்லை!
    அரசாங்கத்துக்கும் வருவாய் தொல்லை!
    எனவே வருவாய்த்துறையைக் கலைத்து விட்டால் பெரும் நிதிச் செலவு குறையும்.
    வணிகத்திற்கும் வியாபாரத்திற்கும் இவ்வளவு சங்கடம் இருக்கும்போது வணிக வரித்துறை எதுக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
    ஏற்கெனவே வாங்கின ஹவுசிங் லோனுக்கு இனிமே EMI கட்ட வழியிருக்காது போலிருக்கு.
    இனிமே எந்த தைரியத்துல பிளாட் வாங்கிப் புது வீடு கட்டுவாங்க.
    அப்படின்னா வீட்டு வசதித் துறை நகரமைப்புத்துறை எல்லாம் வேஸ்ட்தான் போலிருக்கு!
    சரிங்க
    செலவுக்கே பணம் இல்லைன்னா சேமிப்புக்கு வழி ஏது?
    தனிமனிதனும் கடன் வாங்கவும் வழியில்லை. வாங்கினா மட்டும் வருமானம் இல்லாமல் எப்படி திரும்பக் கட்டுவீங்க.
    தொழில்துறைக்கும் அதே நிலைமைதான்.
    அப்படீன்னா பேங்குல என்ன வேலை நடக்கும்?
    அதனால் நிதித்துறை கலைக்கப்பட்டால் என்ன தவறு?
    வயசுக்காலத்தில் வேலையில் இருக்கும்போது சம்பளம் வேஸ்ட்டுன்னா
    வயசானக் கிழங்கட்டைகளை உட்கார வைச்சுப் பென்ஷன் பேமிலி பென்ஷன் ஏன் கொடுக்கணும்னு கண்டிப்பா அரசாங்கம் நினைக்கும்.
    நாம் என்ன செய்வது!
    ஏங்க ஒரு வீட்டையோ சொத்துபத்தையோ வாங்கணும்னா வருமானம் இல்லாம முடியுமா?
    இத்தனை பேர் சோத்துக்கே வழி தெரியாமல் இருக்கான்.
    சொத்து எங்கேயிருந்து வாங்குவது?
    சொத்தே வாங்காவிட்டால் எப்படிப் பத்திரம் பதிவு செய்யமுடியும்.
    அப்படின்னா அவங்களுக்கும் தண்டச்சம்பளந்தானா?
    ஐயையோ!
    இப்படியே பார்த்தா ஒவ்வொரு துறையாப் புட்டுக்கும் போலிருக்கே.
    எல்லாத் துறையும் உருப்படாதுன்னா அரசாங்கம் மட்டும் எதுக்கு இத்தனை கூத்தையும் சும்மா வேடிக்கை பார்க்கவா?
    உங்களுக்கு விவரம் புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
    ப்ளீஸ்.
    GT

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி