கொரோனா தடுப்பு பணிக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு - kalviseithi

May 25, 2021

கொரோனா தடுப்பு பணிக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

 

கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்லாத ஆசியர்கள் 3 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் விவகாரம் சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆசிரியர்களை களப்பணிக்கு அனுப்பாமல், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி சில முக்கியமான பணிகளை மட்டும் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதனை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் களப்பணிக்கு சென்று கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிய வேண்டும் என்றும் 500 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


இந்த சூழலில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகள் யாருக்கெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் அந்த பணிகளுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.


அவ்வாறு கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்லாத ஆசியர்கள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள்ளாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்காதவர்கள் மீது பேரிடர் மேலாணமை சட்டத்தின் 2005 பிரிவு 56-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்கள், சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு மட்டுமாவது இதில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ஆசியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

12 comments:

 1. முடிஞ்சா டிஸ்மிஸ் பண்ணி பாருங்க ஸ்டாலின் ஜி

  ReplyDelete
  Replies
  1. தனி மெஜாரிட்டில செஞ்சாலும் செய்வாங்க ...
   புதிய கல்வி கொள்கை வந்தா skill based வேலைனு சொல்றனுங்க.... வேலை செஞ்சா தான் வேலைக்கேத்த
   சம்பளமேவாம்.... அதெல்லாம் எங்க போய் நிக்குமோ...
   இனி வேலைவாயப்பும் இருக்குமான்னு தெரியல... 2013 2017 2019னு அடிச்சிக்காம இருக்கறத வச்சு சிறப்பா செயல்படுவோம் 😄

   Delete
 2. Teachers are all humans not a machines ......

  ReplyDelete
  Replies
  1. All salaried givt staff are human being.nu solli pazhagunga.... Teachers.a mattum thaniya pirichu maati vidathinga....

   Delete
  2. டேய் TRB fans Club ஈன வாயா.. உனக்கெல்லாம் கடைசி வரைக்கும் திருவோடுதான்டா..

   Delete
 3. தேர்தல் பணி தேர்வு பணி கொரானா நோய் தடுப்பு பணி எதுவாக இருந்தாலும் சிறப்பான முத்திரை பதிப்போம் எனது மக்களுக்கும் அரசுக்கும் உறுதுனையாகயிருப்போம் என்றும் என் தமிழ்நாடு வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. Welcome ji...
   Positive attitude....
   Congratulations 💐💐💐

   Delete
 4. மற்ற அரசு ஊழியர்கள் கோரோனா பணியை செய்து வருகிறார்கள் உங்களுக்கு மட்டும் ஏன் சர்க்கரை நோய் உள்ளது என்று கூறுகிறீர்கள். தற்போது களப்பணியில் உள்ள மற்ற அரசு ஊழியருக்கு சர்க்கரை நோய் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. சோம்பேறி மடையா... ஓசி கஞ்சி குடிச்சி வயிறு வளக்கிற ஒனக்கு என்னடா தெரியும் நோயை பற்றி ..

   Delete
 5. 58,59 age la 80 k,100k vangura thimir la sila per irukka dha seivanga...vela venanu ponga sir..inga enda padichom nu feel panra aayiram per irukkanga..innum settle aagama..2 varusham salery e illla..but neenga oru velayum illa ..ipo poga sonna sugar,bp nu solringa

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒரு வேளைக்கு போறிங்கன்னு வச்சிக்குவோம் . உங்களுக்கு தெரிஞ்ச வேலைய செய்விங்களா இல்லை எந்த வேலை கொடுத்தாலும் செய்விங்க . அப்படியே நீங்க செய்வீங்கின்கனா. அதற்கு ஒரு பயிற்சி வேணாமா . இப்ப ஒரு டிரைவர் க்கு என்ன வேலை தெரியும் . அவர் போய் மின்கம்பத்தில ஏறி மின் வயர் இணைக்க சொன்னா செய்வாரா . போய் இப்படி அறிவாளி மாதிரி comment போடுறத விட்டுவிட்டு படிச்சி தில் இருந்த அதே அரசு வேலைக்கு வர வலிய பாருங்க.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி