ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. - kalviseithi

May 29, 2021

ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு.

> தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 

> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.


விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி