Ph.D சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

Ph.D சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு.

 

தமிழக சட்ட பல்கலையில் பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், 2021- - 22ம் கல்வி ஆண்டிற்கான பிஎச்.டி.,ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 110 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.தகுதியான விண்ணப்பதாரர்கள் சட்ட பல்கலையின், http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம். 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 750ம் ரூபாயும்; மற்றவர்கள், 1,250 ரூபாயும் செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும்.வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடிப்படை கல்வி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ஜூன், 19ல் ஆன்லைன் வழி நுழைவு தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை பொறுப்பு பதிவாளர் பாலாஜி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி