பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % மக்கள் ஆதரவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % மக்கள் ஆதரவு?

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் என 60% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் கருத்துக்கணிப்பு நாளையும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கருத்துக் கேட்பு அடிப்படையில் முதல்வரிடம் நாளை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமர்பிக்கிறார். முன்னதாக, கொரோனா 2 வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் தெரிவித்தார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப +2 தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு 2 நாட்களில் முடிவெடிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

5 comments:

 1. மாணவர்கள் நலன் முக்கியம்

  ReplyDelete
 2. Please cancel the exam because of students health is very important in this situation

  ReplyDelete
 3. then why do they cancel 10th exam?

  ReplyDelete
 4. பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு அடிக்கல் நாட்ட விரும்புவோர் பொதுத்தேர்வு நடத்த ஆதரவு அளிக்கலாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி