பள்ளி ஆசிரியர்கள் 9 மணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ( பத்திரிகை செய்தி ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2021

பள்ளி ஆசிரியர்கள் 9 மணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ( பத்திரிகை செய்தி )

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் போடும் பணி இருப்பதால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்றி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து 50 சதவீத ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்களும் அடுத்த 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த 3 நாட்களுக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவை காரணம் காட்டி வெளியூர் சென்றுவிட்ட நிலையில் பணிக்கு திரும்பவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதனால் ஒரு குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். அதனால், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆசிரியர்களே பள்ளிக்கு வருவது நீடிக்கிறது. இதனால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது  குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல முறை வலியுறுத்தியும் பல ஆசிரியர்கள் வெளியூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்நிலையில் தான், அனைத்து ஆசிரியர்களும் 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.



4 comments:

  1. அப்படியே கொஞ்சம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பக்கமும் போயி பார்க்கவும். லட்சங்களில் ஊதியம் syllabus தொடவே மட்டங்க. எப்போ வருவாங்க எப்போ போவாங்க நு தெரியாது. பேருக்கு பேராசிரியர் பாடமே நடதமாட்டங்க.. புதிய அரசு அவர்களை முறை படுத்தவேண்டும்

    ReplyDelete
  2. பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் செல்வார்கள்.

    ReplyDelete
  3. அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் செல்வார்கள்.

    ReplyDelete
  4. குறித்த நேரத்திற்கு பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்ல உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி