தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் - kalviseithi

Jun 24, 2021

தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும்

தாமதமாக பணிக்கு வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களை, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.


பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சுழற்சி முறை ஆசிரியர்கள், பணிக்கு தாமதமாக வருவதால், சேர்க்கைக்காக வரும் மாணவர்களும், பெற்றோரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.


இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தவும், தாமதமாக வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளனர்.ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. 


எனவே, தலைமை ஆசிரியர்கள் காலதாமதமாக பணிக்கு வரக்கூடாது.சேர்க்கைக்கு வரும் மாணவ - மாணவியரை காத்திருக்க வைக்கக் கூடாது. காலை, 9:15 மணிக்குள் பள்ளியில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.காலதாமதமாக பணிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் செல்வார்கள்.

    ReplyDelete
  2. குறித்த நேரத்திற்கு பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்ல உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி