ஆணையர் சுற்றறிக்கை சார்ந்து ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பெறப்பட்ட தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2021

ஆணையர் சுற்றறிக்கை சார்ந்து ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பெறப்பட்ட தகவல்.

 

ஆணையர் சுற்றறிக்கை சார்ந்து ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பெறப்பட்ட தகவல்.


பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை.

  

ஏற்கனவே அனுப்பப்பட்ட உத்தரவுப்படி 14.06.2021 (திங்கள்) முதல் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களும், தொடக்க- நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் வருகை புரியவேண்டும் என தெளிவாக குறிப்பிட்டு இருந்தும், சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக


தெரியவருகிறது. கொரோனா இரண்டாம் அலையில் பல ஆசிரியர்களை இழந்து இருப்பதோடு, பல ஆசிரியர்கள் நோய்தொற்றிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாமல் மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாமல் இருக்கும்போது ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்தால் நோய்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் அரசு உத்தரவை பின்பற்றாமல் தன்னிச்சையாக ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது ஏற்புடையது அல்ல. எனவே மதிப்புமிகு தலைமையாசிரியர்கள்,  ஆணையர் மற்றும்


அரசு உத்தரவை பின்பற்றி ஆசிரியர்களை நோய்தொற்றிலிருந்து காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக் கல்வி ஆணையரின் உத்தரவை மீறி ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்கும்பட்சத்தில் ஆசிரியர்களின் நலன்காக்க சம்மந்தப்பட்ட உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

.

என்றும் ஆசிரியர் நலனில் 

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், கரூர் மாவட்டம்

12 comments:

 1. நீங்க 5 நாள் கூட school வைங்க ,, அதுக்கு முன்னாடி பஸ் விட்ருங்க, புண்ணியமா போகும்..

  ReplyDelete
  Replies
  1. நடிக்காதிங்க பா....

   Delete
  2. சகோ இதுல நடிக்க என்ன இருக்கு நானெல்லாம் to and fro 190km தினமும் பயணம் செய்யணும்.. bike ல போக சிரமம்.. பஸ் விட்டா கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று சொன்னேன்..

   பஸ் ல போன ஒரு நாளைக்கு 250Rs செலவு ஆனால் பைக்கை ல போன 450Rs ஆகும்..😣😣

   Delete
  3. பேருந்து விடும் வரை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் போய் தான் வர வேண்டும். இந்த சூழலிலும் ஒரு ரூபாய் குறையாமல் அரசு ஊதியத்தை வழங்கி தானே வருகிறது. அப்புறம் என்ன.... உங்களை போன்றவர்களால் தான் என்னை போன்ற ஆசிரியர்களுக்கும் இந்த சமூகத்தில் கெட்ட பெயர். எனக்கு ஒரு நாளைக்கு 200கி.மீ பயணம். போய் தான் ஆக வேண்டும்... முழு சம்பளம் பெறுகிறோம் அல்லவா?...

   Delete
  4. என்ன பிதற்றுகிறீர்?? போக முடியாது என யார் சொன்னா?? பேருந்து விட்டா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்..

   அப்புறம் பெயரையே சொல்லாமல் unknown ஆக வரும் உங்கள் பெயர் எப்படி கெட்டு போகும்.🤣🤣

   Delete
 2. வேலை செய்யாம சம்பளமானு கேட்டப்ப அரசு கூப்பிடலனு சொல்லிட்டு இப்ப கூப்பிடறப்ப ஊசி போடலன்னு காரணம் சொன்னா எப்படி ஜி??

  ReplyDelete
 3. உங்களுக்கு மட்டும் தான் கொரோனா வருமா.... அப்போ வருவாய் துறை மற்ற அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லும் போதும் கொரோனா வராது அப்படி தானே... சோம்பேறிகளா.... வார்த்தை ஜாலங்களை கையாளுவதில் இந்த அரசு ஆசிரியர்களை மிஞ்ச இவ்வுலகில் வேறு எவரும் இலர்...

  ReplyDelete
  Replies
  1. என் இந்த காண்டு ஆசிரியர் மேல் உங்களுக்கு.
   வருவாய் துறையில் வருவாய் இருக்கு .

   Delete
  2. ஏன் நீங்க எல்லாம் பிச்சையா எடுக்கறீங்க..... உங்களுக்கு முழு சம்பளம் வருதா இல்லையா... என் பள்ளியில் பணி புரியும் சமூக அறிவியல் ஆசிரியர் போன்று போல நீங்கள்...

   Delete
 4. Moodikkitu.irundhamariyadhaikidaikkum

  ReplyDelete
 5. >>forwarded message<<
  உங்கள் போலித்தனம் மிக்க பதிவுக்கு சில வினாகள்.
  1 கொரானாவில் ஆசிரியர்கள் மட்டும்தான் பாதித்தார்களா?இறந்தார்களா?தலைமை ஆசிரியர்கள் பாதிக்கபட்டு இழந்துள்ளார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறியவில்லையா?
  2 அலுவலக பணியாளர்கள் இறக்கவில்லையா?கொரானாவில் பாதிக்கவில்லையா?
  3 அலுவலக பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் முடித்த மாணவர்கள் அனைவருக்கும் மாற்றுச்சான்றுகள் எழுதியோஅல்லது EMIS லிருந்துகணினியில் தட்டச்சு செய்து தலைமை யாசிரியர்களே அனைத்து செய்து கொடுக்க முடியுமா?
  4 பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் +1 வகுப்பில் சேர்க்கை.
  அந்த மதிப்பெண் பட்டியல் யார் தயார் செய்து கொடுப்பது?
  5 ஆறாம்வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை புதிய மாணவர்கள் சேர்க்கையை எப்படி செயல்படுத்து?
  6 குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு பள்ளிக்கு செல்ல மாற்றுச்சான்று கேட்பவர்க்கு எப்படி கொடுப்பது?
  7 சங்கவாதிகளே சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தித்து அறிக்கை விடுங்கள்.
  இல்லை என்றால் பள்ளி நிருவாகத்தில் தலையிட வேண்டாம். பள்ளி நிருவகத்திற்கு- தலைமை யாசிரியர்களுக்கு உதவுகின்ற ஒருசில ஆசிரியர்கள் ஒவ்வொரு பளளியிலும் உள்ளனர்.அதை இது போன்ற போலித்தனமான அறிக்கை வாயிலாக கெடுக்க வேண்டாம்.
  ஆசிரியர்களை சமூகத்தின் ஒரு பகுதியினர் எப்படி எல்லாம் விமர்சனம் செய்கின்றனர் எப்பதை ஊடகத்தின் வாயிலாக அறிவோம்.
  பள்ளியில் தலைமை யாசிரியர்கள் மட்டுமே பணிசெய்யும் நிலையை அந்த பகுதி மக்கள் பார்த்து ஆசிரியர்கள் எப்படிப்பட்ட விமர்சனத்தை எதிகொள்வார்கள் என்பதை உங்கள் போன்றோரின் அறிக்கைக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
  நீங்கள் நினைக்கலாம் அல்லது எதிர் வினா கேட்கலாம். அரசு அப்படிதானே ஆணை இட்டுள்ளது,தலைமை ஆசிரியர்கள் அதன்படிதானே செயல்பட வேண்டும் என.
  அரசு ஆணைகளை அப்படியே எல்லா வகையிலும் கடைபிடித்தால் ஆசிரியர்கள் நிலை எப்படி இருக்கும்? அப்படி செயல்பட்டால் சுமுகமான நிலை பள்ளியில் இருக்குமா?சிந்தியுங்கள்.
  இறுதியாக பள்ளிக்கு வர விரும்பும் ஆசிரியர்களை இது போன்ற பதிவுகள் மூலம் தடுக்காதீர்கள்.
  சிந்திக்கும் சங்கமாக இருந்தால், தலைமை ஆசிரியர்களின் இக்கட்டான நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்!
  பள்ளிகளில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
  இன்னும் ஒன்று நான் என் பள்ளி ஆசியர்களை வர கட்டாயப்படுத்தவும் இல்லை. அழைக்கவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
  எதார்த்த நிலையை உணர்த்தவே இந்த பதிவு. பள்ளியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று எனக்கும் தெரியும்.
  >>forwarded message<<

  ReplyDelete
 6. நாம் இழந்தது உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களை தான்.. சோம்பேறி ஊதாரி ஆசிரிய கூட்டம் கொரானா ஆரம்பத்தின் போதே வீட்டுக்குள் சுரங்கம் தோண்டி குடும்பத்தோடு பதுங்கி விட்டனர். 1 வருடமாக பள்ளி பக்கமே வரவில்லை. எங்கள் பள்ளியில் 3 இரத்த காட்டேரிகளின் போன் சுவிட்ச் ஆப் .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி