எந்த வயதுவரை குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை -சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2021

எந்த வயதுவரை குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை -சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்

 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர்.


இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம். 


18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி