மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கவும், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 22, 2021

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கவும், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. இதையடுத்து, கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.


தொடர்ந்து, கொரோனா இரண்டாவது அலையின் கோரதாண்டவம் காரணமாக 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையும் குறைந்து வருவதால் ஜூலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசின் பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர் புத்தகங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு  இப்போதைக்கு இல்லை என்பதால், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது.


பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள் - Download here...

3 comments:

 1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 2. அரசுப்பள்ளியில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் அரசுப்பணி முன்னுரிமை என்ற செய்தியை உங்கள் உறவினர், நண்பர்கள் மற்ற அனைவருக்கும் WHATSAPP மெசேஜ், ஸ்டேட்டஸ், DP போன்ற வகையில் பரப்புங்கள் .

  முடிந்தவரை அதிகப்படியான குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர நம்மால் ஆன முயற்சி செய்ய வேண்டும் .

  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளி TC இல்லாமல் ஆதார் எண் கொண்டே அரசுப்பள்ளியில் சேர முடியும் என்பதை பரப்புங்கள்.

  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த ஒரு மிகச்சிறந்த காரணத்திற்காக NEET இல் நல்ல மதிப்பெண் எடுத்த பல அரசுப்பள்ளி குழந்தைகள் இலவசமாக மருத்துவ படிப்புக்கான இடமும், இலவச கட்டண சலுகையும் பெற்றதை பெரிதுபடுத்தி பரப்புங்கள் .

  தற்போது தரமான கல்வியும் , இலவச புத்தகம் , கணினி, மிதிவண்டி, போன்ற பல நற்பலன்கள் பற்றி பெற்றோரிடம் விளக்கி கூறுங்கள்.

  தயவு செய்து தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு தனக்கு மட்டும் அரசு ஆசிரியர் பணி வேண்டும் என்று கனவில் கூட எதிர்பார்க்க வேண்டாம் .

  ReplyDelete
  Replies
  1. Do you know many teachers post are vacant in Govt Schools?
   Nearly 10000
   Then how can they give quality education ?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி