புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது - kalviseithi

Jun 11, 2021

புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது

 

ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் சோர்வின்றி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பெருந்தொற்று காலத்திலும் கற்பித்தல் பணிக்கு பெரிதும் உதவுவது அரசின் கல்வி தொலைக்காட்சிதான். பள்ளிகள் திறக்கும் வரையில் இணைப்பு பாட பயிற்சிகளும், படித்ததை நினைவுகூறுவதை பரிசோதிக்கும் வகுப்புகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.


ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம். ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்களும், வகுப்பறை இல்லாத குறையை போக்குவதால் ஆசிரியர்களும் அதிகளவு கல்வி சேனலில் பங்கெடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா கூறியதாவது:கல்வித் தொலைக்காட்சியையும் தனியார் தொலைக்காட்சிகளையும் மாணவர்கள் பார்க்க தவறிவிட்டால், யூடியூப்பில் (kalvitvofficial) அடுத்தநாள் காலையில் பார்த்து கொள்ளலாம். 

அதில் வகுப்பு வாரியாக வீடியோக்கள் இருக்கும். இதனால் எந்த இடத்தில் இருந்தாலும் மாணவர்களால் வகுப்புகளை கவனிக்க முடியும்.தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு, 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்(டயட்) பாடம் எடுக்கப்படுகிறது.


 

இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒத்துழைப்புடன் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க பள்ளி ஆசிரியர்களை டயட்டுக்கு வர சொல்வோம். 

அங்கு வகுப்பெடுப்பது படம் பிடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுடன், 70 எபிசோடுகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு டயட்டிலும் கேமராமேன், எடிட்டிங் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள். விரைவில் புதுமையான முறையில் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. Kalvi tv super! English medium students purinthu kollumbadi English meaning um saerthu solli koduthal uthaviyaga irukkum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி