தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு. - kalviseithi

Jun 9, 2021

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு.

 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.780ஆகவும், கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1,410ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் சேவை கட்டணத்துடன் ரூ.1,145ஆக விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.150 க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை தொடர்ந்து கண்காணிக்க மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்டணம் வசூலிக்க எந்தவொரு தனியார் தடுப்பூசி மையத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களில், தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை அறிவித்தார்.

15 comments:

 1. அருமை ...


  ஒன்றிய அரசு..

  கல்விச்செய்தியை பார்த்தாவது இந்த இந்து, தினமலம் திருந்தி தொலையட்டும்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடு மாநிலம் இனி தமிழ்நாடு ஒன்றியம் என்று அழைக்கப் படுமா ஐயா..

   Delete
  2. இந்து பத்திரிக்கை சேர்ந்த இந்து ராம் கலைஞர் குடும்பத்துக்கு சம்மந்தி உறவு. ஏன் இந்த பிராமணர் வேறுபாடு. அவர்கள் எல்லாம் சுகமாக இருந்தது மற்றவர்கள் மனதில் நஞ்சை வளர்க்கின்றனர்.

   Delete
  3. உண்மை ஐயா..

   Delete
 2. இது தான் உண்மை வாழ்த்துகள் க‌ல்விச் செய்தி...
  ப‌ல‌ மாநில‌ங்க‌ள் இணைந்த‌ ஒன்றிய‌மே இந்தியா...
  அதிகார‌ம் ஒரே இட‌த்தில் குவிக்க‌ப்ப‌டுவது மிக‌வும் ஆப‌த்து...என‌வே அனைத்து மாநில‌ங்க‌ளுக்கும் அதிகார‌ம் ப‌கிர்ந்து அளிக்கப்ப‌ட‌ வேண்டும்...அதுவே உண்மையான‌ ஜ‌ன‌நாய‌க‌ம்..

  ReplyDelete
  Replies
  1. பல மாவட்டங்கள் சேர்ந்த ஒன்றியமா தமிழ்நாடு?

   Delete
  2. தமிழ்நாடு பல மாவட்டங்கள் சேர்ந்த தமிழ்நாடு ஒன்றியமா ஐயா?

   Delete
  3. அட அறிவாளி மொழி வழியாக தமிழ் பெரும்பான்மை கொண்ட தமிழர் நாடு தமிழ்நாடு..

   போ போய் அரசியல் அமைப்பின் அடிப்படையாவது படித்து தோலையும்..

   Delete
 3. இது என்ன ஒன்றி அரசு. மத்திய அரசு எப்போது பெயர் மாறியது...?

  ReplyDelete
  Replies
  1. Union government. Of india

   Delete
  2. கோமாளி கையில் ஆட்சி இருந்தால் இப்படி தான் செய்வார்கள்.. சால்ரா போடும் தமிழ்நாட்டு ஊடகங்கள்..

   Delete
 4. மைய அரசு, மத்திய அரசு என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மத்திய அரசு என்று அரசியல் அமைப்பில் வார்த்தை இருந்தால் காட்டுங்க அறிவு ஜீவிகளே??

   Delete
 5. கல்விச்செய்தியில் செய்தி போடுபவரே முட்டாள் னு இப்பதான் தெரியுது...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி