அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2021

அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கல்வி என்பது மாணவர்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. மேலும் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு மற்றும் இறந்தவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.


அதற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காலிப்பணியிடங்கள் விவரங்களை நாளைக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்து பாடங்கள் மற்றும் உடற்கல்வி நிலை-2 காலிப்பணியிட விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாக கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் நாளைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க வேண்டும். அதன் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

56 comments:

  1. Replies
    1. TET 80% + B.ED SENIORITY 20%
      OVER. BE READY
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      Delete
  2. Bt asst mattum thana? Wat about second grade teachers? 😭😞

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்று கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லும் காலிப்பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியப்பணியிடங்கள் எனவே இது டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்...நடுநிலைப் பள்ளிகளில் நிரப்ப ஏற்படுத்தும் பட்டதாரி பணியிடங்களே டெட் தேர்வர்களை நியமனம் செய்ய இயலும்..தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்னும் காலிப்பணியிட விவரம் கணக்கெடுப்பு தொடங்கவில்லை ஆதலால் டெட் தேர்வர்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ளவும்...

      Delete
    2. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் என்பது 6 முதல் 8 வரை வகுப்புகளுக்கானது து, இதற்கு TET PAPER-2 அவசியம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணி செய்யலாம் . PGTRB மேல் நிலையில் மு.கலை ஆசிரியர்களுக்கானது. குழப்பம் அடைய வேண்டாம். இடை நிலை பள்ளிக்கு TET Paper - 1 போதும்.

      Delete
  3. Bt asst mattum thana? Wat about second grade teachers? 😭😞

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்று கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லும் காலிப்பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியப்பணியிடங்கள் எனவே இது டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்...நடுநிலைப் பள்ளிகளில் நிரப்ப ஏற்படுத்தும் பட்டதாரி பணியிடங்களே டெட் தேர்வர்களை நியமனம் செய்ய இயலும்..தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்னும் காலிப்பணியிட விவரம் கணக்கெடுப்பு தொடங்கவில்லை ஆதலால் டெட் தேர்வர்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ளவும்...

      Delete
  4. Respected CM sir Consider 2013 TET passed candidates. Pls

    ReplyDelete
    Replies
    1. Posting podathatharku 1st karaname 2013 batch thaan...

      Delete
    2. No 5 persent relaxation...mind it...

      Delete
  5. S.. What about second grade teacher

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்று கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லும் காலிப்பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியப்பணியிடங்கள் எனவே இது டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்...நடுநிலைப் பள்ளிகளில் நிரப்ப ஏற்படுத்தும் பட்டதாரி பணியிடங்களே டெட் தேர்வர்களை நியமனம் செய்ய இயலும்..தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்னும் காலிப்பணியிட விவரம் கணக்கெடுப்பு தொடங்கவில்லை ஆதலால் டெட் தேர்வர்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ளவும்...

      Delete
  6. Second grade teacher? Sattunu oru muduvu edunga posting patthi

    ReplyDelete
  7. Pgtrb????????????????????????????????????????????

    ReplyDelete
  8. Ithu yapothum yadukra list dha paapom yana nadakuthu nu kita thatta 2013 appuram posting gey podala inga 2 varusam nu potrukanga adha pakala yaarum

    ReplyDelete
    Replies
    1. Yes 2 years ah podala solranga aana 2014 pola tha last ah posting potanga athuku apuram podave ila ye elarum exam eluthi wait panrom. TETmark + seniority Best Idea.

      Delete
    2. நண்பர்களே இன்று கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லும் காலிப்பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியப்பணியிடங்கள் எனவே இது டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்...நடுநிலைப் பள்ளிகளில் நிரப்ப ஏற்படுத்தும் பட்டதாரி பணியிடங்களே டெட் தேர்வர்களை நியமனம் செய்ய இயலும்..தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்னும் காலிப்பணியிட விவரம் கணக்கெடுப்பு தொடங்கவில்லை ஆதலால் டெட் தேர்வர்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ளவும்...

      Delete
    3. முற்றிலும் தவறு நண்பா உங்கள் கருத்து . TET Paper - 2 தேர்ச்சி அடைந்தால் DSE மற்றும் DEE இரண்டிலும் பணி நியமனம் பெறலாம். உங்களுக்கு புரிதல் வேண்டி சந்தேகம் இருந்தால் வினா எழுப்பவும்.

      Delete
    4. Bro mudiyathu as for rules chance illa dted qualification veru bed veru

      Delete
  9. they mentioned that they asked the vacancy list for municipal schools.. read it

    ReplyDelete
  10. Any possible frnds 93 marks in TET paper 2

    ReplyDelete
  11. Frds unga Mark, p1 or p2,community,subject, employment year podunga.

    ReplyDelete
  12. Dai....
    Ethana murai da neenga list eduppinga...
    Pothunda pongada...
    School open panna vazhiya parunga da...

    ReplyDelete
  13. TET 80% + B.ED SENIORITY 20%
    OVER. BE READY
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
    Replies
    1. நண்பரே
      TET MARK OK

      B.ED SENIORITY க்கு 20%என்பது எவ்ளோ வருட இடைவெளிக்கு எவ்ளோ MARK
      அதையும் கூறி விடுங்கள்

      Delete
    2. நண்பர்களே இன்று கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லும் காலிப்பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியப்பணியிடங்கள் எனவே இது டிஆர்பி தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்...நடுநிலைப் பள்ளிகளில் நிரப்ப ஏற்படுத்தும் பட்டதாரி பணியிடங்களே டெட் தேர்வர்களை நியமனம் செய்ய இயலும்..தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்னும் காலிப்பணியிட விவரம் கணக்கெடுப்பு தொடங்கவில்லை ஆதலால் டெட் தேர்வர்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ளவும்...

      Delete
  14. 95mark bc comunity English any chance

    ReplyDelete
  15. Stalin than vaareu.
    Videal thara porareu.this govt youngster's joab govt

    ReplyDelete

  16. Any possible frnds 93 marks in TET paper 2 ...community MBC subject Physics

    ReplyDelete
  17. Friends maths paper2 90marks sc 2013 batch posting kidaikuma

    ReplyDelete
  18. TET + B.Ed SENIORITY
    படி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் 2013,2017,2019என அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் காலிப் பணியிடங்கள் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிய வருகிறது
    No argument, no tensionReply


    பொருள்: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு B.Ed.,எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் தொடர்பாக.


    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் 🙏🙏

    நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ஆம் தேர்ச்சி பெற்று கடந்த 12 வருடங்களாக தனியார் பள்ளியில் மிகவும் குறைவான சம்பளம் பெற்று நான் B.sc.,B.Ed கல்வி தகுதியை தமிழ் வழியில் பயின்று 2008ல் எம்பிளாயிமென்ட் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் .சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணி நியமனம் செய்து இருந்தால் 10ஆண்டுக்கு முன்பே வேலை கிடைத்து இருக்கவேண்டும் .

    ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் . ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் செய்யாமல்

    2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

    பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் .

    நன்றி

    ReplyDelete
  19. நியமனத்தேர்வு மூலமாகவே பணிநியமனம் வழங்கப்படும்

    ReplyDelete
  20. வயது சீனியார்டி தகுதி தேர்வு கணக்கில் பணி வழங்க வேண்டும்

    ReplyDelete
  21. Again create this kind problem.. no one get job anytime.. already this type of issues only hold the post .... So again start it

    ReplyDelete
  22. Ha ha ha first posting podranglanu paapoom

    ReplyDelete
  23. weightage cut off last posting tet paper 2 maths oc candidate list

    ReplyDelete
  24. weightage cut off last posting tet paper 2 maths oc candidate list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி