தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பல ஆண்டுகளாக போதிய பணியாளர்கள் இல்லாமலும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வந்த நிலையில், அது நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு ஏராளமான வழக்குகள் உயர்நீதின்ற விசாரணையில் உள்ளன.
இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விடலாம் என்ற கருத்து முந்தைய ஆட்சியில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை டிஎன்பிஎஸ்சியிடம் வழங்கி விடலாம் என்று தற்போதைய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பேட்டியும் உள்ளது. உயர்கல்வி துறைக்கு தேவையான ஆசிரியர்கள், டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போட்டி தேர்வு பயிற்சியாளர் நட்ராஜ், ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பது என்பது தவறான முடிவு என்றும், இது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
நட்ராஜ், போட்டி தேர்வு பயிற்சியாளர்
கடந்த காலங்களில் பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பாக நடத்தி இருக்கிறது என்றும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மட்டும்தான் பிரச்சினையாக வெடித்தது என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பதற்கு பதிலாக, அதை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று நட்ராஜ் கருத்து தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருவதாகவும், பல்வேறு தேர்வுகளில் குளறுபடிகள் நடைபெற்று பலர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் நட்ராஜ் சுட்டிகாட்டினார்.
Trb more froud for 10 year and tnbsc also froud even because admk goverment
ReplyDeleteOld news..trb announced not to abort..don't work
ReplyDeleteதயவு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிடுவது நல்லது
ReplyDeleteOne of the worst corrupt organization is TRB. so kindly recruitment should be done through TNPSC. and also it will be written exam and interview for assistance professor post....
ReplyDeleteஎந்த துறையில் பிரச்சினை இல்லை டிஎன்பிஎஸ்சி யில் இது போலவே பிரச்சினை வந்தது இல்லையா
ReplyDeleteTRB,TNPSC,NEET அவர்களுக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொண்டு appointment செய்து கொள்ள சுலபமான ஒரு easy வழி. இதில ஏழைகளுக்கு வயது கடந்து வேலை வாய்ப்பை தகுந்த வயதில் பெற முடியாத நிலை. நீண்டகாலமாக appointment delay ஆனதும் இதுதான் காரணம். இவர்கள் சுய லாபத்துக்காக exams சுயநலவாதிகள் பயன் படுத்த வழி விடுவதாலும் ஏழை மற்றும் தகுதி இருந்தும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் தற்போது வயதையும் கடந்து tharvu எழுத தகுதி இல்லாதவர்கள் என்ற நிலையில் வேற வேலை kidaika வழி இல்லாமல் நிற்கின்றனர். இதுகுறித்து யாரும் கவலைப்படவே இல்லை. பணம் படைத்தவர்கள் அதிகாரிகள் எப்படியும் தவறு செய்து தப்பித்து விடுவார்கள். அனைத்து வழிகளிலும் அவதிப்படுபவர்கள் ezhaigal exam எழுத தகுதி இழந்தது வயது மூப்பு அடைந்த கல்வித்தகுதி உடைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருக்கும் ஏழைகள்.
ReplyDelete