Flash News : மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) மாணவர் சேர்க்கை 2021 - 22க்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2021

Flash News : மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) மாணவர் சேர்க்கை 2021 - 22க்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. 

1 . பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.


3 . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.


4 . மிக அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் ( கொள்குறிவகை ) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு , மாணவர்களுக்கு வழங்கி , அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம்.


6 . மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.


மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





5 comments:

  1. 10 the mark sheet illaamal, result arivikkaamal evvaaru seeruvathu????🤔🤔🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  2. Minister only changed... Higher Authority officers are releasing stupid ideas.....

    ReplyDelete
  3. So pg trb exam will possible agust?

    ReplyDelete
  4. I really enjoy simply reading all of your weblogs. Simply wanted to inform you that you have people like me who appreciate your work. Definitely a great post. Hats off to you! The information that you have provided is very helpful. news in hindi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி