அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2021

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களுக்கு  ரூ .50 ஆயிரம் மதிப்பில் அரிசி,காய்கறி வழங்கிய அரசுப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மருத்துவமனையில் மே 7 ஆம் தேதி முதல் இயங்கிவரும் கோவிட் 19 நோயாளிகளுக்கான வழிகாட்டும்  உதவி மையத்தில் தன்னார்வலர்களாக தலைமையாசிரியர் கள் மற்றும்ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


அவர்களின் முயற்சியால் மருத்துவ மனையில் பணிபுரியும் 90 தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான  அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்கள் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம்  முன்னிலையில் பயனாளர்களுக்கு வழங்கினார்.


 நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் நினைவுப் பரிசு வழங்கினார்.


நிகழ்ச்சியில்  அறந்தாங்கி கல்வி மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களே உங்களை போன்றவர்கள் தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்கள் என்று சிந்தித்து எங்களுக்காய் அரசிடம் எடுத்துக் கூறக்கூடாதா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி