கோவிஷீல்டு இடைவெளி எவ்வளவு காலம் இருந்தால் நல்லது? ஆய்வில் புது தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2021

கோவிஷீல்டு இடைவெளி எவ்வளவு காலம் இருந்தால் நல்லது? ஆய்வில் புது தகவல்

 

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை எப்போது போட்டால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என்பதை ஆய்வு ஒன்றின் அடிப்படையில் பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்டுள்ளது.


அதன்படி இரண்டு டோசுகளுக்கு இடையேயான இடைவெளி 6 வாரங்களுக்கு குறைவாக இருந்தால் பூஸ்டர் டோசுக்குப் பிறகு 55 புள்ளி ஒரு சதவிகித பாதுகாப்பு மட்டுமே கிடைக்கும் என அது தெரிவித்துள்ளது. இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக இருந்தால் 59 புள்ளி 9 சதவிகித பாதுகாப்பும், 9 முதல் 11 வாரமாக இருந்தால் 63.7 சதவிகித பாதுகாப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இரண்டு டோசுகளுக்கான இடைவெளி 12 வாரங்கள் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் பாதுகாப்பு 81 புள்ளி 3 சதவிகிதமாக அதிகரிக்கும் என தி லான்செட் கூறியுள்ளது.

1 comment:

  1. Injunction demand only reason above message published by health department.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி