நான்கு மாதமாக முடங்கிய ஆசிரியர் தேர்வு வாரியம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2021

நான்கு மாதமாக முடங்கிய ஆசிரியர் தேர்வு வாரியம்!

 

கலைப்பதா, நடத்துவதா என்ற குழப்பத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள், நான்கு மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. ஆசிரியர் நியமன பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


தமிழகத்தில், அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக நியமனம் நடந்து வருகிறது.

தனி ஆணையம்


இந்நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல்வந்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கைகள், மார்ச்சில் நிறுத்தப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகளை காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சட்டசபை தேர்தல் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., அரசு அமைந்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகள் துவங்கவில்லை. 



அதேநேரம், டி.என்.பி.எஸ்.சி.,யின் பணி நியமன நடவடிக்கைகள்துவங்கி, ஒவ்வொரு தேர்வாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள் கூறியதாவது:தேர்தல் அறிவிக்கும் முன்னரே, டி.ஆர்.பி.,யில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், உயர்கல்வி துறைக்கு பணி நியமனம் மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்படும் என, அப்போதைய உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். செயல்பாடுகள் முடக்கம்பின், தேர்தல் காரணமாகடி.ஆர்.பி.,யின் பணிகள் நிறுத்தப்பட்டன.


தற்போது புதிய ஆட்சி அமைந்த பின், உயர்கல்விக்கான பணி நியமனங்களை, டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்த உள்ளதாக, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடிகளால் அதை நடத்துவதா, கலைப்பதா என, தமிழக பள்ளி கல்வித்துறை தெளிவான முடிவு எடுக்கவில்லை.இதனால், மார்ச் முதல் தற்போது வரை டி.ஆர்.பி.,யின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. 


பேராசிரியர் பணிகளுக்குஏற்கனவே, நேர்முக தேர்வு முடிந்த பிறகும் பட்டியல் வெளியிடப்பட வில்லை. ஆசிரியர் பணி தேர்வுகளுக்கு தயாரான, பட்டதாரிகளும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

19 comments:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களது நிலைமை மிகவும் மன உளைச்சலை கொண்டு வந்தது, , இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,,இதற்கு தாமதம் ஏற்படுத்தியவர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்க போகிறார்கள்

    ReplyDelete
  3. Athu epo seyalpattathu, ipo mudankuvatharku

    ReplyDelete
  4. 2017 ல் சிறப்பாசிரியர்கள் தேர்வு நடைபெற்றது அந்த தேர்வில் ஓவியம் தையல்,உடற்கல்வி, இசை அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்,,,இரண்டு வருடங்களுக்கு முன்பு merit list மட்டும் பணி நியமனம் தந்து விட்டார்கள், அதில் தமிழ் இட ஒதுக்கீடு மட்டும் இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,,,அமைச்சர் அவர்கள் இதை கண்டு விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறோம்,,முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என்று எல்லா இடத்திற்கும் மனு அனுப்பி வைத்துள்ளோம்,,,பழைய கல்வி துறை அமைச்சர் இருக்கிற போது காலில் கூட விழுந்தோம், இனி என்ன செய்வது என்று தெரியவில்லை,,,,கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete
  5. 2013ku apram teachersku entha vacancyum fill panala, 4months aa aahuthu...

    ReplyDelete
  6. 10 ஆண்டுகளாக செயல்படாமல் தான் இருக்கிறது

    ReplyDelete
  7. எட்டு வருஷமா முடங்கிக் கிடக்கிறோம்

    ReplyDelete
  8. U take second list in pg trb

    ReplyDelete
  9. ஜே.ஜெயலலிதா இறந்த பின் ஆசிரிய தேர்வு வாரியம் செயலிழந்து போனது
    தளபதி அவர்கள் தான் புதுப்பிக்கணும்
    நம்பிக்கை வைக்கிறோம் .

    ReplyDelete
  10. Pg.trb.உடணே தேர்வு நடத்த வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. ௭துக்கு ராசா இ௫க்கிர வழக்கு போதாதா

      Delete
  11. Raman andalum ravanan andalum namaku itha nilamaithan so
    Waste government

    ReplyDelete
  12. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  13. இது அனைவருக்கும் தெரியும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை அதற்கு என்ன என்பதை கூறுங்கள்

    ReplyDelete
  14. TRB exam இருக்க..? இல்லையா..? எதாவது ஒரு முடிவ சொன்னால் அவன் அவன் வேலைய பார்ப்பான்.. உன்னையும் கெடுப்பேன் உன் வேலையே யும் கெடுப்பேன் னு போயிற்றுக்கு.. 😔😔

    ReplyDelete
  15. அம்மையார் இறந்ததிலிருந்து முடங்கிதான் கிடக்கிறது

    ReplyDelete
  16. தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று ஏழு வருடமாக தனியார் நிறுவனங்களிடம் பல அவமானங்களை பெற்றுக்கொண்டு இருக்கிறோம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா

    ReplyDelete
  17. கருனையே இல்லாத அரசாக நீங்களும் இருக்க வேண்டாம் முதல்வர் அவர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி