நீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு - மாணவர்களுக்கு உதவ தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2021

நீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு - மாணவர்களுக்கு உதவ தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 13-ம் முதல் நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் ntaneet.nic.in என்ற இணையதளம் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பதிவு செய்ய, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரம் சார்பில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆக.6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், விண்ணப்பிக்கவும் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து, பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு பயன் பெறலாம். இந்தப் பணிகளின்போது கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி