OBC பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானம் கணக்கில் எடுக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2021

OBC பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானம் கணக்கில் எடுக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு..!

 

ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானம் கணக்கில் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.சி. சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. கணக்கில் சேர்க்கக் கூடாது என்பதுததான் அரசாணை தலைப்பு தவறு

    ReplyDelete
  2. கிரிமி-லேயர் வருமான வரம்புக்கு ஊதியத்தையும், விவசாய வருமானத்தையும் கணக்கில்கொள்ளக்கூடாது என்பதுதான் சரி. தயவு செய்து திருத்தம் செய்யவும்.

    ReplyDelete
  3. தவறான தலைப்புடன் எதையும் தெரியாமல் copy பதிவுகள் செய்யவேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி