ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகள் 14 - நிறைவேற்றுமா தமிழக அரசு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2021

ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகள் 14 - நிறைவேற்றுமா தமிழக அரசு?

தமிழகத்தில் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பானது ஜாக்டோ - ஜியோ 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு , கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான கோரிக்கைகளுக்காக , முந்தைய ஆட்சியாளர்களின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு , தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது . கடந்த ஜாக்டோ - ஜியோவின் அனைத்து போராட்ட - இயக்க நடவடிக்கைகளுக்கும் ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது . தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் கொரோனா நோய்த் தொற்று ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு , படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற உளமார்ந்த நம்பிக்கையோடு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை அளிக்கிறோம்.




4 comments:

  1. வாய்பில்ல ராஜா,எங்களுக்கு கைலாச நாடு உருவாகியாச்சு எங்க அதிபர் நித்தி இருகாரு இனி திமுக அரசு வேண்டாம்

    ReplyDelete
  2. அடே நீ இன்னும் போகலையா

    ReplyDelete
  3. ஒரே கோரிக்கை GPF.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி