பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2021

பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்!

 

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் பிஎஸ்சி உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் படி ஜூலை 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்ல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டய படிப்பு (டிப்ளமோ) மற்றும் பட்ட படிப்பு (பிஎஸ்சி) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் நேரடி 2ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை  www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in  என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


பதிவு கட்டணத்தை மாணவர்கள் இணைய வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். இணையம் மூலம் செலுத்த முடியாதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலம் வரைவோலையை சமர்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது. விண்ணப்ப பதிவுகள் முடிந்த பிறகு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். மேலும் பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி