அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டநிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில்  உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்  சட்டமசோதாவை சட்டசபையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறினார். தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

1 comment:

  1. 6 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்(RTE-25%) இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் படித்துவிட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவருக்கு இந்த தொழிற்கல்விகளுக்கான 7.5%
    இட ஒதுக்கீடு பொருந்துமா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி