ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2021

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு பின் புதிய ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

அரசுப் பள்ளிகளில் விரைவில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது : 

தமிழக முதல்வர் அறிவித்தபடி செப் .1 - இல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க நட வடிக்கை எடுக்கப்படும்.


 தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு , முதல்வர் அறிவுரைப்படி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.


 இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதில் கவன முடன் செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.



34 comments:

  1. 2021
    2022
    2023
    2024
    2025
    வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பின் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்
    நாங்கள் சொல்வது செய்வதை தான் சொல்வோம் இல்ல சொல்வது தான் செய்வோம் செய்வது தான் சொல்வோம்
    R

    ReplyDelete
    Replies
    1. Tet pass+seniority confirm this government.

      Delete
    2. Ada Sammy indha text exam pass panavanga theriyama pass pannitanga..kalvi seidhi open panninalay indha Tet karanga imsai Tha....Tet la pass panavangaluku mattum oru exam vatchu select pannuga pa..or same ellathukum again oru Tet vainga....Tet only eligible test

      Delete
    3. Exam vatchu select pannunga.

      Delete
  2. இதே மாதிரி தான் முன்னாள் கல்வி அமைச்சர் விரைவில் ,விரைவில் என கூறினார்.. இவரும் அவரை போன்றே விரைவில் என கூறுகின்றார்..எதையும் செய்ய போவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. செய்வார் கண்டிப்பா....
      ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்...

      Delete
  3. விடியல் என்றோ?

    ReplyDelete
    Replies
    1. 4 1/2 வருஷத்துக்கு வாய்ப்பில்ல ராஜா....

      Delete
  4. 'விரைவில்' கலந்தாய்வு நடத்தப்படும்...

    ReplyDelete
    Replies
    1. அந்த விரைவில் என்ற வார்த்தைக்கு மட்டும் தான் அர்த்தமே புரிய வில்லை...counselling நடத்தாம scl open பண்றாங்க,
      வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை பற்றி நினைப்பதே இல்லை.
      counselling நடக்கும், நமக்கு பக்கமா உள்ள scl கிடைக்கும்
      நு நினைத்துக்கொண்டு தங்களின் மனநிலை,உடல்நிலை கவனிக்காமல் .காத்துக்கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் ஏராளம். பள்ளிகள் திறப்பதை நாங்களும் வரவேற்கின்றோம்...மகிழ்ச்சி.
      அரசு இந்த விஷயத்தையும் கருத்தில் கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ transfer counseling நடத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

      Delete
  5. சரியான கருத்து 😄

    ReplyDelete
  6. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்த்த உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு கூடுதல் பணியிடங்களில் நிரப்பிட வேண்டும். ஆ.சங்கர் செங்கோட்டை

    ReplyDelete
  7. முன்னாள் ஒருவர் விரைவில் என்று சொல்லி சத்தியமங்கலத்தில் மட்டும் பேட்டி கொடுப்பார் இப்போது இவர் புதிய பொலிவுடன் திருச்சியில்.....

    ReplyDelete
    Replies
    1. Sathy yenga oor. Inga rasi illa pola so ipa trichy. Ingayum??????

      Delete
  8. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒரே சங்கமாக இணைந்தால் மட்டுமே அரசிடம் உங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறும். இது நடக்கும் வரை எந்த அரசிடமும் உங்கள் கோரிக்கைகள் நடப்பது கேள்விக்குறியே?

    ReplyDelete
  9. இந்த செய்தியை எத்தனை வருடமா போடுவீங்க முடியலடா சாமி

    ReplyDelete
  10. எதற்கு ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு? ஏற்கனவே அவங்க சொந்த வூர்ல தான் பணியில் இருக்கிறார்கள். எத்தனை பணியிடம் என்று சொல்லுங்கள்

    ReplyDelete
  11. Already financial scarcity, no da no other salary benifit told by ptr. Then how it s possible new post. Any new press open for currency printing...?

    ReplyDelete
  12. சார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராமல் நாம் வீணாக விவாதிப்பதில் பலனில்லை ஆசிரியர் பணி என்பதே கானல் நீர் போல் ஆகிவிடும் நிலை

    ReplyDelete
  13. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  14. எப்ப gpf பென்ஷன் இல்லன்னு சொன்னாங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்.
    27ந்தேதி அல்வா தான்...
    😭😭😭
    பட்ஜெட் அன்னைக்கு விடியற்காலைல என் முதல் கமெண்ட் பாருங்க...
    ஏன்டா ஓட்டு போட்டோம்னு feel பண்ண வைக்க போற பட்ஜெட்னு...
    அதே தான் 27 அன்னைக்கும்...
    ஏன்னா இவிங்க டிசைன் இப்படி 😭

    ReplyDelete
  15. எல்லா பயல்களும் திருட்டுபயல்கள் தான்...

    ReplyDelete
  16. Better all are keep quit for some time.Un wanted discussion only make trouble to all.After Covid19 schools are not opened so for and all are known about financial crises of govt.past 16 months salary paid for teachers without any work.covid pandemic also not ends sofor if govt recruit further teachers no use and increases financial burden only.so need sometime for govt recovery.

    ReplyDelete
  17. Seniority appointment through TET is DMK policy and already several times requested to previous govt.Hope that all the schools are open soon and expect postings will fill up soon.BT Asst will require minimum 5000

    ReplyDelete
  18. Hope that schools are open soon and after one month govt will announce minimum 5000 BT asst surely.seniority through TET is DMK policy and already requested to previous ADMK govt same.

    ReplyDelete
  19. விரைவில் என்பது இல்லை என்பதும் ஒன்று

    ReplyDelete
  20. counselling nadakkuma nadakkatha??

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு தெரியும்.god only know

      Delete
  21. Part time teacher counseling nadakuma

    ReplyDelete
  22. I think, Poyyamozhi should save teachers life.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி