தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2021

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்

 

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் 




தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை 13.08.2021 ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான அறிவிப்புகள் அறிவித்ததை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கின்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ .5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததையும் , அதேபோல் மகளிர் அரசு ஊழியருக்கு 12 மாதகாலம் மகப்பேறு விடுப்பு வழங்கியதையும் வரவேற்கிறோம். திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள கீழ்க்காணும் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இல்லாதது எமாற்றம் அளிக்கிறது.

 அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் , சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊர்புற நூலகர்கள் . எம்ஆர்.பி . செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம் , குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , கொரோனாவை காரணம் காட்டி 27 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி அறிவிக்காதது , அரசு துறைகளில் காலியாக உள்ள 4.1 / 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த எந்தவிதமான அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படாதது அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் , தமிழக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது , எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையினை நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டுமென தமிழக முதல்வரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதைத்தொடர்ந்து எதிர்வரும் 16.08.2021 அன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்து நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

20 comments:

  1. 10 ஆண்டுகளாக ஏமாந்த கதைகள் ஏராளம் ஏராளம்..

    வார்த்தை ஜாலங்களில் எழுதி ஏதும் பயன் ஆவதில்லை..

    கடந்த 18 மாதங்களாக மாத ஊதியம் பெற்றதே நாம் பெற்ற பேறாக நினைக்க வேண்டும்.

    காரணம் நாம் இருக்கின்ற அசாதாரண காலம்..

    இந்தக் காலத்தில் உயிரிழந்தவர்கள் உடமையை இழந்தவர்கள் குடும்பத்தை இழந்தவர்கள் ஏராளம் ஏராளம்..

    யார் இறந்தாலும் எதை இழந்தாலும்
    முழுமையாக வேலையின்றி மாத ஊதியம் பெற்றது என்பது வரலாறு..

    ReplyDelete
    Replies
    1. முட்டு கொடுங்க நல்லா

      Delete
    2. யார் முழுமையாக வேலையின்றி ஊதியம் பெற்றது ?முழு ஊரடங்கு என்ற ஒரு சில நாட்கள் தவிர அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்பட்டன .பொது போக்குவரத்து இல்லாத காலத்தில் கூட அலுவலகங்கள் இயங்கின . கடந்த வருடம் முழு ஊரடங்கு கால நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிகிழமைகளும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்கின .

      Delete
    3. Hello full salary gave ADMK government, what about DMK... Why post pone to DA, even union government after announcements

      Delete
    4. Great feelings sir, we are going daily to school and take classes to the students through online (using WhatsApp), conduct unit test, and paper correction, writing lesson plan, enga work correct ah poguthu sir, students mattum than varala but school running regularly...

      Delete
    5. நேற்று ஒ௫த்தன் வேலைக்கு போயிட்டு ௭ன்ன கதை ௨டரான் பா௫ங்க☝

      Delete
  2. திமுக வை அரசு ஊழியர்களின் எதிரியாக மாற்றி விட்டார் ஸ்டாலின். கலைஞர் திமுக வேறு , ஸ்டாலின் திமுக வேறு என்று நன்றாக புரிந்துவிட்டது.. மிகப்பெரிய துரோகி ஸ்டாலின்..

    ReplyDelete
    Replies
    1. Arasu uliyargalin aatchi yaruku vendum adithattu makkalukana arasaga mattum irunthal pothum

      Delete
  3. தமிழக அரசின் செலவினத்தில் 70% அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காக செலவிடப்படுவதாக சிலர் அறியாமையில் அறிக்கை விட்டுக் கொண்டும் அதையே பலர் வழிமொழிந்து கொண்டும் இருந்ததை அனைவரும் அறிவர்.

    இன்று நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு தெளிவாக கூறியுள்ளது. ஊதிய செலவிற்காக 19% மட்டுமே செலவிடப்படுகிறது.மானியங்களுக்காக 35 % செலவிடப்படுகிறது இந்த உண்மை அனைவருக்கும் தெரியட்டும்.

    ReplyDelete
  4. Arasu uliyargalum arasiyal vathigalum ondruthan
    Avargal muthalidu pottu makkalai suranduvargal
    Arasu uliyargal padipai muthalidai pottu lancham vangi suranduvargal
    Makkal nangal emaligalai irupom
    Kettal poramai enpargal

    ReplyDelete
  5. PG TRB ENGLISH-வருகின்ற (15.08.2021)
    Unit -IX- HISTORY OF THE ENGLISH LANGUAGE -PART-1( MCQ-180 Mark test ) Free Test With Keys in pdf also
    அனைத்து ‌தேர்வுகளும் மற்றும் விடைகளும் இலவசம்.
    https://youtu.be/nBivmtN2TMA
    👆👆👆👆👆👆👆👆👆👆👆
    இதுவரை Subscribe செய்யவில்லை என்றால் Subscribe செய்துவிட்டு
    👉Set Reminder 👈ஆன் செய்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Subscribed செய்தார்கள் மட்டுமே
    பார்க்கும் வகையில் ‌பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
    TRB ENGLISH இலவச தேர்வில் கலந்துகொள்ள விருப்பமா..? PDF-ல் படிக்க நண்பர்கள் குரூப்பில் இனணந்து கொள்ளவும் மற்றம் நண்பர்களிடம் மற்றும் உங்களது சந்தேகங்களை கேட்கலாம்.
    @ Join our telegram group @
    https://t.me/joinchat/50AooIq0JmYzZWNl
    👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆இந்த தகவல் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

    ReplyDelete
  6. 🔥🤔ஒர் அரசின் ஆண்டு வரி வசுல் மற்றும் வருவாய் என்பது வேறு. ஆண்டின் கடன் பற்று என்பது வேறு. அரசின் செலவினங்கள் அனைத்தும் ஆண்டின் வருவாய் நிதி நிலை முடிவுகள் வைத்து தான் செலவினம் அமையும். ஆனால் அரசு கடன் உயர்ந்துவிட்டது என்ற காரணத்திற்காக அடிப்படை அகவிலைப்படி ஊதியத்தை நிறுத்திவைப்பது முறையன்று. இது எதற்கு ஒப்பாக அமையும் என்றால் ஒரு அரசு ஊழியரின் மாத வருமானம் ஐம்பதாயிரம் எனக் கொண்டால் அவருடைய கடன் சுமை ஒரு கோடியாக இருக்கும் பட்சத்தில் அவர் அவரது வீட்டு உணவு செலவின திற்கான தொகையை பெருவாரியாக குறைப்பது என்பது முட்டாள்தனம். கடன் செலுத்துதல் என்பது ஆண்டு வருவாயில் ஒரு பகுதியை செலுத்துதல் ஆகும். வருவாய் முழுவதும் கடனுக்கு சென்று விடாது. அப்படி சென்று விட்டால் அந்த குடும்பம் திவாலாகி விட்டது என்று அர்த்தம். நபரின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறி?
    அரசு , ஊழியர்கள் வழங்கக்கூடிய அடிப்படை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைத்தால் அரசினுடைய கடன்சுமை முற்றிலும் நீங்கி விடுவது போல ஒரு மாயையை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு செய்வதால் கடன் சுமை ஏதும் நீங்கி விடப்போவதில்லை. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய இ எல் சரண்டர் விடுப்பு ஊதியம், ஊக்க ஊதியம், பயணப்படி சலுகை மற்றும் இன்ன பிற சலுகைகளை நிறுத்தி வைத்துள்ளது. ஒரு அரசினுடைய அவசியமான செயல் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்படும் அகவிலைப்படியை வழங்குவது. ஆனால் நிதி அமைச்சகம் கடன் சுமையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது மேலும் சிக்கலை உருவாக்குமே தவிர தீர்த்து வைக்க முடியாது. மேலும் அரசு குறிப்பிட்டுள்ள ஒரு ரூபாய் வருவாயில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள செலவினம் 19% என அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய அரசாக இருந்தாலும் சரி இன்றைய அரசாக இருந்தாலும் சரி அரசு ஊழியர்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை எண்ணத்தைக் கொண்டு உள்ளது என தெரிகிறது.😭😭😭

    ReplyDelete
  7. Even private company expenses tent and salary 50% of gross profit, but government employees expenses around 25% including salary and pension, without government workers no body running government @ DMK, ADMK, BJP any body, don't beg, it's wright, give to DA, otherwise all the MLA MP, Ministers tell don't want to salary and pension coming march 23

    ReplyDelete
  8. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 70 சதவீதம் என்று உண்மைக்கு புறம்பாக முந்தைய அரசில் சிலர் சொல்லி வந்தனர். ஆனால் 19 சதவீதம் தான் என்று தற்போதைய அரசு உண்மையை கூறியுள்ளது. நன்றி.

    ReplyDelete
  9. மரியாதைக்கு தகுதியற்ற கனக சபாபதி நா .....க்கு ,
    எத்தனை மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை, காவல்துறை,ஊரக வளர்ச்சித்துறை, பத்திரப்பதிவுத்துறை என எண்ணற்ற அரசுத்துறை அலுவலர் முதல் பணியாளர்கள் வரை பணியாற்றியது உனக்குத்தெரியதா? அவர்கள் பணிபுரிய வில்லையா? எத்தனை அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டு இருந்தன? ரேஷன் கடையில் நீ பொருள்கள் மற்றும் நிவாரண நிதி வாங்கவில்லை? உனது பிள்ளைகளைபள்ளியில் சேர்க்கவில்லையா? நீ பேருந்தில் பயணம் செய்யவில்லையா? 18 மாதம் நீயோ உனது உறவினர்களோ அரசு சார்ந்த எந்த உதவியையும் , பயனையும் பெறவில்லையா? முழுமையான ஊரடங்கு எத்தனை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது? தனது வாழ்நாள் முழுமையையும் மக்களுக்காகவும், அரசுக்காகவும் அர்ப்பணிக்கும் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது தேவை இல்லையா?
    நாளை உனது உறவினர்களோ, பிள்ளைகளோ அரசுப் பணிக்கு வராமலேயே இருப்பார்களா? உன்னைப்போல் ஒரு அதி புத்திசாலி அன்று வரலாறு பற்றி பேசாமல் இருக்க கொடிய வைரஸ்கள் வராமல் இறைவனை வேண்டிக்கொள்.

    ReplyDelete
  10. Part time teacher ku sambala uiyarvu pannuga

    ReplyDelete
  11. போராட்டம் என்பது முட்டாள் தனமானது மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ள சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளக்கூடாது. ஆசிரியர்களாக இருப்பதற்கு தகுதி அற்றவர்கள்

    H

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி