பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்க முதன்மைக் கல்வி அலுவலரே அனுமதி வழங்கலாம் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 24, 2021

பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்க முதன்மைக் கல்வி அலுவலரே அனுமதி வழங்கலாம் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

 

அரசு உதவி பெறும் / சுயநிதிப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்க சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.


பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் சுயநிதி / நிதியுதவி / பகுதி நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் , சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் , சார்ந்த பள்ளியை பார்வையிட்டு , அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு , அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு , உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 


அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகார பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி , இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி / நிதியுதவி / பகுதி நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகளில் ஆங்கிலவழிப் பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி இக்கருத்துருக்களை பார்வை -1 & 3 - ல் காணும் அரசாணைகளில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து , ஆங்கில வழிப்பிரிவு துவக்க அனுமதியினை தங்கள் நிலையில் வழங்கிக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.English Medium Star - CEO Allow Proceedings - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி