இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2021

இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு.

 

இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவை என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பாடங்களை கற்றுத் தரவும்,தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கவும் சென்னையில் உள்ள தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்தி பிரச்சார சபாசார்பில் வழங்கப்படும் அனைத்துகல்விசார் சான்றிதழ்களையும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகாரத் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுதொடர்பாக உரியவழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், இந்த உத்தரவை யுஜிசி வெளியிட்டதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. ஆனால் அதேசமயம் தமிழக பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று இதே பல்கலைக்கழக மானியக்குழு தான் அறிவிக்கின்றது. பல்கலைக்கழகங்களை சுயமாக அப்பகுதி மக்களின் தேவையை அறிந்து பட்டப் படிப்புகளை துவங்கலாம் என ஒருபுறம் கூறிவிட்டு மறுபுறம் பல படிப்புகள் வேலைக்கு தகுதி இல்லாதவை என கூறுவது பல்கலைக்கழக மானியக் குழுவின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இந்த முரண் நிலை? பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முரண்பாடான நிலையினால் படித்து பட்டம் பெற்று வேலை தேடுவோருக்குத்தான் இன்னல்கள் பல வருகின்றன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி