Telegram பயனர்களுக்கு சூப்பர் புதிய அப்டேட் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2021

Telegram பயனர்களுக்கு சூப்பர் புதிய அப்டேட் அறிவிப்பு.

 

நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக மக்களின் தேவைக்கேற்ப தகவல் தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை தொடந்து தற்போது Telegram வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஓன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 1000 பார்வையாளர்களுடன் குரூப் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.


புதிய அப்டேட்:


சேட் செய்வதற்கு எவ்வாறு WhatsApp பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பெரிய பைல்களை பரிமாறிக் கொள்வதற்கு Telegram பயன்படுகிறது. மேலும் டெலிக்ராமில் உள்ள குரூப்களில் உறுப்பினர்கள் சேர்வதற்கான வரைமுறைகள் இல்லை. இது போன்ற பல அம்சங்களை கொண்டு உள்ளது. தற்போது இதனை தொடர்ந்து சில புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. அதன்படி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ காலில் தற்போது 1000 பார்வையாளர்கள் இணைவதற்கான சாதியத்தை கொண்டு வந்துள்ளது.


இது குரூப் வீடியோ அழைப்புகள் 2.0 என பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணையும் 1000 பார்வையாளர்களில் 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் பங்கேற்கவும், மீதமுள்ளவர்கள் அதனை பார்க்கவும் மட்டுமே முடியும். இது போன்ற அப்டேட்கள் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முன்பை விட வீடியோ செய்திகளை உயர் தரத்தில் பதிவிடும் அம்சத்தையும் இணைத்துள்ளது. இனி வழக்கமான விடீயோக்களை 0.5x அல்லது 2x வேகத்தில் பார்ப்பது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.


டெலிக்ராமில் உள்ள மீடியா பிளேயர் இப்போது பயனர்களை 0.5x, 1.5x மற்றும் 2x பிளேபேக் வேகத்தில் உள்ளடக்கத்தை கொண்டு இயங்க தயாராகியுள்ளது. இதனை தொடந்து பயனர்கள் தங்கள் திரையை பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் டெலிக்ராம் செயலியில் உள்ள மீடியா எடிட்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு அப்டேட்களுடன் களமிறங்கி உள்ளது டெலிக்ராம் செயலி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி