ஆசிரியர்கள் வருகையை வேலை நாட்களில் TN EMIS Mobile App ல் பதிவு செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 3, 2021

ஆசிரியர்கள் வருகையை வேலை நாட்களில் TN EMIS Mobile App ல் பதிவு செய்ய உத்தரவு.

 

ஆசிரியர்கள் வருகையை TN EMIS Mobile App ல் பதிவு செய்ய திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.


அனைத்து அரசு , அரசு நிதியுதவி சார்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது . கடந்த 02.08.2021 முதல் தினந்தோறும் வருகை புரியும் ஆசிரியர்களின் வருகையை TN EMIS mobile app இல் காலை 10.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.


 மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கண்டவாறு அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையினை தினந்தோறும் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களால் பதிவு செய்யப்படுகிறதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறும் , இப்பணிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் , பள்ளி துணை ஆய்வாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி