02.10.2021 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Sep 30, 2021

02.10.2021 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


இதன் தொடச்சியாக ,  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி , எதிர்வருகின்ற அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு , இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப்பொருளையும் தவறாது சேர்த்து , கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதனை அடிப்படையாகக் கொண்டு , அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் ( CEO , DEO , DIET- Principal and Facuities , BEO , ADPC , APO , HMs , EDCS , DCs and BRTES ) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


எனவே , இந்நிகழ்வினை சிறப்பு கவனத்துடன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி