மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு: தேர்வு மையங்களும் அதிகரிப்பு - kalviseithi

Sep 1, 2021

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு: தேர்வு மையங்களும் அதிகரிப்பு

மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது நுழைவுத் தேர்வு  (சியூசெட்) நடத்தப்படுகிறது.


அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. பொது நுழைவுத் தேர்வு  செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

கணினி வழித் தேர்வு

இந்தப் பொது நுழைவுத் தேர்வானது 2 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.

தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.16-ம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபரில் போர்ட் பிளேர் மற்றும் கேரளாவில் காசர்கோடு ஆகிய 2 இடங்களில் புதிதாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்களுக்கு: cucet.nta.nic.in

மாணவர்கள் விண்ணப்பிக்க: https://testservices.nic.in/examsys21/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYsjZOdyj8DuPcxGBqAK2Dxg17SOPYNi2Zee0LIuc/he  என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யலாம்.

1 comment:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK ( ENGLISH, MATHS, CHEMISTRY, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி