தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு! - kalviseithi

Sep 1, 2021

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு!


பொதுப் பணிகள் 2010 - ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.

பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு.

தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.

தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்- தமிழ்நாடு அரசு.


GO NO : 82 , DATE : 16.08.2021 - Download here...

17 comments:

 1. இந்த வருடம் பொது தேர்வு நடைபெறுமா  ஜெயபிரகாஷ் சேலம்

  ReplyDelete
 2. ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி வாய்ந்த 15000 பேருக்கு ஆசிரியர் பணி
  நியாமன ஆணை வழங்கிய அய்யா அவர்களுக்கு....  டேய்ய்ய் கோட்டைசாமி....
  எந்திரி....

  ReplyDelete
 3. கடந்த 2017 – ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விக்கான சிறப்பாசிரியர் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. 2018- ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில் 20தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
  முறைப்படி அரசு கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் தமிழ்வழியில் படித்த சான்றிதழ்கள் வைத்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

   Delete
 4. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 5. சிறப்பு ஆசிரியர்களுக்கு தயவுசெய்து பணி நியமனம் செய்யுங்கள் வயது போய்க்கொண்டே இருக்கிறது

  ReplyDelete
 6. இவர்கள் பணி நியமனம் செய்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் போல

  ReplyDelete
 7. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா அல்லது புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா இவர்களில் எவர் உயிரோடு இருந்திருந்தாலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார் போல, ,வழக்கு வழக்கு வழக்கு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் 😭😭😭என்ன சொல்வது,,,,,,ஆனால் ஒன்று மட்டும் நடக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு,,,,,,,,,,,

  ReplyDelete
 8. அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஐயா அவர்களே தமிழ் மொழி பயின்றவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள், சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 9. கும்பகோணம் அரசு ஓவிய கல்லூரியில் படித்தவர்களுக்கு முறையாக தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் உள்ளது விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 10. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தையல் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்று வரை தமிழ் இட ஒதுக்கீடு பணி நியமனம் செய்யவில்லை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசு ஆணையை பார்த்து உங்கள் நியாயம் கேளுங்கள்,,,உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த செய்தியை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி