ஒற்றைப் பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படிக்க உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2021

ஒற்றைப் பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படிக்க உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு.

 

ஒற்றைப் பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:


''முழு நேர முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2021-22ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் கல்வி உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும். உணவு, விடுதிக் கட்டணம் ஆகியவை வழங்கப்படாது.

இந்த உதவித்தொகையின்கீழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,200 தொகை வழங்கப்படும்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்

பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாதந்தோறும் ரூ.3,100 தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கும் 30 வயதே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மேற்படிப்புக்காக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழிக் கல்விக்கு உதவித்தொகை  கிடையாது.

மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021''.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி