வீடுதேடி பள்ளிகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டம் (அக்டோபர் மாதம் முதல்) - kalviseithi

Sep 30, 2021

வீடுதேடி பள்ளிகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டம் (அக்டோபர் மாதம் முதல்)

 

தமிழகத்தில் "வீடு தேடி பள்ளிகள்" என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் உள்ள நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.


அதன்படி,ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இருப்பிட பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


இதற்காக,வீதி வகுப்பறை என்ற பெயரில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை அக்டோபர் மாதத்திலிருந்து செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி,இத்திட்டத்தை முதற்கட்டமாக சென்னையிலிருந்து செயல்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 comments:

 1. மூக்கு புடைப்பா இருந்த இப்படித்தான் யோசிக்கச்சொல்லும்

  ReplyDelete
 2. பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

  ReplyDelete
 3. தொரத்தி விடுங்க your honour.. பள்ளியில் வெட்டியா உக்காந்துகிட்டு மேல்நிநிலை வகுப்பில்ஆசிரியர் இல்லாத போது வகுப்பை சத்தமில்லாமல் பார்ரத்து கொள்ள போக சொன்னால் கூட போகாமல் ஏமாற்றும் ஆசிரியர்களுக்கு இது தான் சரி..

  அப்புறம் ஒரு அறிவாளி பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பா என கேட்டார்.. ஆசிரியர்கள் பாடம் எடுக்க செல்வது சிறார்களுக்கு தானே தவிர சிறைக்கு அல்ல ...

  ReplyDelete
 4. மொதல்ல போஸ்டிங் போடுங்க...
  அவுங்க வீடுகளிலே கூட தங்கி
  பாடத்தை நடத்துகிறோம்...
  உயிரை வாங்கதீங்கடா
  பேசாமல் டெட் பாஸ் பண்ணுனவங்க
  அரசியலில் சேர்ந்தால் கூட
  இந்நேரம் MLA ஆகி
  ஒரு லட்சம் சம்பளம் + கிம்பளம் பெற்று
  இந்த மாதிரி வாயிலே வடை
  சுட்டு இருக்கலாம் போல

  ReplyDelete
 5. விதி வலியது....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி