TRB மூலம் தேர்வான சிறப்பாசிரியர்கள் தபால் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு ௧ோரிக்௧ை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2021

TRB மூலம் தேர்வான சிறப்பாசிரியர்கள் தபால் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு ௧ோரிக்௧ை!

 

தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வான சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என கவின்கலை பட்டதாரி நலச் சங்கத் தலைவர் P.அய்யாவு,  கோரிக்கை விடுத்துள்ளார். 


கடந்த 2017 – ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விக்கான சிறப்பாசிரியர் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. 2018- ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியலும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், தமிழ்வழி இடஒதுக்கீடு  பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களைத் தவிர மற்ற 240 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. பின்னர், தமிழ்வழி இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.

முறைப்படி அரசு கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் தமிழ்வழியில் படித்த சான்றிதழ்கள் வைத்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. 

கடந்த ஜூலை மாதம் 06/07/2021 திருக்குவளை வந்த முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது  என்பதை தெரிவித்தார் 


இதை தவிர, தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழ ங்க த தால்  சிறப்பாசிரியர் பணியிடங்களில் 20% பணியிடங்கள் காலியாகவே உள்ளன.எனவே, இது குறித்து விரைவான பரிசீலனை மேற்கொண்டு, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 comments:

  1. பாவம் சும்மா விடாது

    ReplyDelete
  2. எங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை வெளியிட்டதற்கு கல்வி செய்தி ஊடகத்திற்கு நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
  3. எனக்கு தெரிந்து மூன்று ஆண்டுகளாக பதிவு செய்கிறீர்கள் இன்று வரை பலன் கிடைக்கவில்லை

    ReplyDelete
  4. அரசு நடத்தும் TTC சான்றிதழ் தமிழ் வழி கிடைப்பது இல்லை free hand outline and model drawing exam certificate க்கு தமிழ் வழி இல்லை
    கேட்டல் ஓவியத்திற்கு மொழி இல்லை என்கிறார்கள்
    ஆனால் தமிழ் வழி கல்வி சான்றிதழ் வேண்டுமாம் என்ன செய்ய
    ஆனால் நீங்கள் ஓவியத்தை தமிழில் வரைந்தீர்களா
    தமிழில் ஓவியம் வரைந்தார் என்று சான்றும் கொடுத்தார்களா

    ReplyDelete
  5. எழுதியதோ,,,வரைந்ததோ தமிழ் வழி என்று கேட்கவில்லை,,,,,உங்கள் ஆசிரியர் தமிழில் கற்று கொடுத்தாரா,,,இல்லை ஆங்கிலத்தில் கற்று கொடுத்தாரா என்று தான் சான்றிதழ் வாங்க சொல்கிறார்கள்,,,,,அவ்வாறு தமிழ் வழி கற்றவர்களுக்கு முன்னுரிமை,,,

    ReplyDelete
  6. ஒரு பெண் ஊனமுற்றவர் என்று சொன்னால் மட்டும் வேலை தருவது இல்லை,,,,அவர்கள் முறைபடி
    மருத்துவர் ஆலோசனை பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்குகிறார்கள்,,,அதே போன்று தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் பணி வழங்க வேண்டும்,,,higher grade படித்தது எல்லாம் அதிகபட்சமாக நம்முடைய senior இடம் படித்து இருப்போம்,,,,,அவர்கள் யாரும் அரசு பதிவு பெற்று நடத்துவதில்லை,,,,higher grade படித்தது எல்லாம் டியூசன் போன்று தான்,,,,டியூசன் படித்து pubic exam எழுதுவது போன்று தான்,,,,,,,அரசு தரப்பில் higher grade க்கு தமிழ் வழியில் கேட்கிறார்கள்,,,,அவை சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை

    ReplyDelete
  7. தமிழ் வழி சான்றிதழ் என்பது பள்ளி மற்றும் கல்லூரியில் மட்டுமே பெறபடுவதாகும்

    ReplyDelete
  8. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  9. அரசு கவின் கல்லூரியில் தமிழ் வழி சான்றிதழ் உள்ளது

    ReplyDelete
  10. எங்களது வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  11. ௭ங்களின் கோரிக்கையை கல்வி செய்தியில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  12. விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி