2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல் - kalviseithi

Oct 12, 2021

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல்


 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிசோதனை என்பது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் அக்டோபர் மாதத்தில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற உறுதியினை தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் இந்த தடுப்பூசி திட்டத்திற்கான நிபுணர் குழுவினர், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவானது 3 கட்டங்களாக நடத்திய பல்வேறு விதமான பரிசோதனைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் 2 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளனர். அவசர கால அனுமதியாக இது வழங்கப்பட்டுள்ளது. தங்களது அனுமதி அடங்கிய பரிந்துரையை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு தற்போது அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஆவணங்களை சரிபார்ப்பது அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா, பக்கவிளைவுகள் குறித்து சரிபார்த்து ஐசிஎம்ஆர் அமைப்புக்கு அனுப்பி வைப்பார்கள். இன்னும் சில வாரங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே ஒன்றிய அரசு இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி